சூரரைப்போற்று அற்புதப் படைப்பு.. பாராட்டி கொட்டித்தீர்த்த ரசிகர்கள்!

சென்னை : தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரரைப் போற்று திரைப்படம் இன்று நள்ளிரவு வெளியாகி உள்ளது.

Recommended Video

Soorarai Pottru Review | 'Equally Balanced' Surya • Sudha Kongara

வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகியிருந்த சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் ஏற்கனவே ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில் இப்பொழுது ரசிகர்கள் இந்த திரைப்படத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த வெறித்தனமான திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில் இப்பொழுது சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.

மிகப்பெரிய நம்பிக்கை

மிகப்பெரிய நம்பிக்கை

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சூர்யாவின் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் சமீபத்திய சூர்யாவின் திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் சுதா கொங்கரா உடன் இணைந்து சூர்யா நடித்துவரும் சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.

ஓடிடி தளத்தில்

ஓடிடி தளத்தில்

சூரரைப் போற்று திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில், இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களையும் கவர்ந்ததோடு இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

முழுக்க முழுக்க வெறித்தனமாக

முழுக்க முழுக்க வெறித்தனமாக

வாழ்க்கையில ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி ஒருநாள் ஜெயித்திடும் என்கிற பழமொழிக்கு ஏற்றவாறு சூர்யாவின் மாறா கதாபாத்திரம் திரைப்படம் முழுக்க முழுக்க வெறித்தனமாக வேட்டையாடி உள்ளது.

கனவை உடைத்தெறிய

கனவை உடைத்தெறிய

குறைந்த செலவில் அனைவரும் விமான சேவையை பயன்படுத்த வேண்டும், விமானம் என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டும் அல்ல சாதாரண மனிதனையும் சென்றடையவேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு விமானத்தை உருவாக்க நினைக்கும் மாறாவின் கனவை உடைத்தெறிய பல்வேறு பிரச்சினைகள் வர அனைத்தையும் கடந்து அந்த லட்சியத்தில் மட்டுமல்லாமல் காதலிலும் மாறா எப்படி ஜெயிக்கிறார் என்பதே சூரரைப் போற்று திரைப்படத்தின் கதை.

ஜிவி பிரகாஷின் இசை

ஜிவி பிரகாஷின் இசை

இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இந்த இப்படத்தில் சூர்யா நடித்திருக்க மேலும் மாஸ் கூடியிருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசை இந்த திரைப்படத்திற்கு மற்றுமொரு பெரும் பலமாக அமைந்துள்ளது.

சினிமாத்தனமான காட்சிகள்

சினிமாத்தனமான காட்சிகள்

எப்படியாவது வாழ்க்கையில் ஜெயித்து விட வேண்டும் என்ற துடிப்புடன் படம் முழுக்க கண்ணீருடன் சூர்யா நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்து இருக்க பல காட்சிகள் ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் சினிமாத்தனமான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

காதல் காட்சியில்

காதல் காட்சியில்

மேலும் தமிழ் சினிமாவிற்கு புதிய வரவாக வந்திருக்கும் அபர்ணா பொம்மி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டுள்ளார். ஒருபுறம் மாறாவின் வெறித்தனமான முயற்சி மற்றொருபுறம் பொம்மியுடன் ரசிக்க வைக்கும் காதல் காட்சியில் என சூரரைப்போற்று அனைவரும் விரும்பும் மிகச்சிறந்த படமாக வெளியாகி உள்ளது.

ராக்கெட்டே விடலாம்

ராக்கெட்டே விடலாம்

லட்சியம் நிறைஞ்ச ஒருவனுக்கு காதலி கிடைப்பது சுலபம். ஆனா அந்த கனவ நோக்கி அவன் முட்டி, மோதி, உருண்டு, பெரண்டு, அவமாணப்பட்டு, முடங்கி, எழுந்து திரும்ப ஓடும் போது, கடைசி வரைக்கும் கூட நின்னு, ஊர் என்ன சொன்னா என்ன, நீ ஓடூ நான் பாத்துக்குறேன்னு சொல்ற பொம்மி மாதிரி காதல் துணை இருந்தா
ஏரோபிளேன் என்ன ராக்கெட்டே விடலாம்.

முதல் பிளாக்பஸ்டர் மூவி

முதல் பிளாக்பஸ்டர் மூவி

நள்ளிரவில் ரிலீஸான சூரரைப்போற்று படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் விடிய விடிய காத்திருந்து பார்த்து சமூக வலைதளங்களில் ஆரவாரமாக கொண்டாடி பாராட்டித் தள்ளி வருகின்றனர். மேலும் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில் சூரரைப் போற்று முதல் பிளாக்பஸ்டர் மூவி என ரசிகர்கள் கௌரவப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X