எதிர்பார்க்கலல இப்படியொரு ஃபர்ஸ்ட் லுக்கோட வருவேன்னு.. மாஸ் காட்டும் சூர்யா!
சென்னை: இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
மாரா எனும் கதாபாத்திரத்தில் விமான ஓட்டியாக சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார். தற்போது, சூரரை போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, "இவர்தான் மாரா.. அசாதாரணமான கனவுகளுடன் இருக்கும் சாதாரண மனிதன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் சிக்ஸ் பேக் பாடியுடன் அந்திரத்தில் சூர்யா பறக்கும் லுக் வெளியாகியுள்ளது.
காலை முதலே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.
இன்று மாலை 4 மணிக்கு சூரரை போற்று வெளியாகும் என்ற அறிவிப்பை தொடர்ந்து ட்விட்டரில் #sooraraiPottruFirstLook இந்தியளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே., என தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சூர்யாவுக்கு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான் படம் ஆறுதல் வெற்றியை தந்தது.
ஆனால், காப்பான் படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள் அந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் வரிசையில் சேர விடாமல் செய்துவிட்டது.
இந்நிலையில், இறுதிச்சுற்று எனும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தை சூர்யாவும் அவரது ரசிகர்களும் பெரிதும் நம்பியிருக்கின்றனர்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சர்வம் தாள மையம் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த அபர்ணா பால முரளி நடித்துள்ளார்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அண்மையில் ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான தனுஷின் அசுரன் படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சூரரை போற்று படத்திலும் சூர்யாவுக்கு தரமான பி.ஜி.எம்.களை ஜி.வி. பிரகாஷ் போட்டிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











