சூர்யா ரசிகர்களுக்கு ஒரு செம நியூஸ்.. சூரரைப் போற்று படத்துக்கு என்ன சான்றிதழ் தெரியுமா?

சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

Recommended Video

Kaakha Kaakha 2 Exclusive Update • Suriya, Jothiks • Gautam Menon

2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முற்றிலும் முடிந்து, தணிக்கை சான்றையும் பெற்றுவிட்டது.

லாக்டவுன் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் திரைக்கு வந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான கம்பெனி ஓனர்

விமான கம்பெனி ஓனர்

ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற பழமொழியை ஊர்க்குருவியாலும் பருந்தாக முடியும் என நிகழ்த்திக் காட்டுவதே சூரரைப் போற்று படத்தின் கதை. ஒரு சாதாரண மாறா எப்படி விமான கம்பெனி நிறுவனத்துக்கு ஓனராக மாறுகிறார் என்பதை திரைப்படமாக உருவாக்கி உள்ளார் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா.

மிரட்டல் டீசர்

மிரட்டல் டீசர்

இந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதியே சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியாகி மிரட்டியது. வாரணம் ஆயிரம் படத்தை போல பலவிதமான பரிமாணங்களில் தன்னை செதுக்கி நடிகர் சூர்யா நடித்திருந்த மேக்கிங் வீடியோவும், டீசரும் சூர்யாவின் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வியக்க வைத்தது.

நடுவானில்

நடுவானில்

அதை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விமான நிலையத்தில் பிரம்மாண்டமாக சூர்யா நடத்தியிருந்தார். விமானத்தில் பயணிக்காத 70 மாணவர்கள் உள்பட 100 பேரை தன் சொந்த செலவில் பறக்க வைத்து நடுவானில் "வெய்யோன் சில்லி" பாடல் வீடியோவையும் ரிலீஸ் செய்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

யு சான்றிதழ்

யு சான்றிதழ்

கோடை விடுமுறைக்கு சூர்யாவின் சூரரைப் போற்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக புதுப் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆக முடியாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது சூரரைப் போற்று படத்திற்கு ‘யு' சான்றிதழ் கிடைத்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் டிவீட் போட்டுள்ளார்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை போலவே சூரரைப் போற்று படமும் OTT தளத்தில் நேரடியாக வெளியாகுமா? என்ற கேள்விக்கு இல்லை, இந்த படம் தியேட்டர் ரிலீசுக்கு பின்னரே ஆன்லைனில் வெளியாகும் என சூர்யா சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது ‘யு' சான்றிதழ் குறித்து ஜி.வி. பிரகாஷ் அறிவிக்க அவரிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்டனர். அதற்கு சீக்கிரமே வரும் என பதில் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X