ராட்சசன் சாதனையை முறியடித்த சூரரைப்போற்று.. வாய் பிளந்த ரசிகர்கள்!

சென்னை : விறுவிறுப்பான திரில்லர் கதையை கொண்டு உருவான ராட்சசன் திரைப்படம் இன்று வரை அதிக ரேட்டிங் கொண்ட திரைப்படமாக இருந்து வந்த நிலையில் இப்போது அதனை முறியடித்துள்ளது சூரரைப்போற்று.

சூர்யாவின் மாஸான நடிப்பில் உருவான சூரரைப்போற்று சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில் அது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

உலக அளவில் வெளியாகும் திரைப்படங்களை ரேட்டிங் செய்யும் இணையதளமான ஐஎம்டிபி-ன் ரேட்டிங் படி ராட்சசனை விட சூரரைப்போற்று அதிக ரேட்டிங் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஜோடியாக இளம் நடிகை

ஜோடியாக இளம் நடிகை

இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வந்த சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக இளம் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்.

வாழ்ந்து காட்டியிருப்பார்

வாழ்ந்து காட்டியிருப்பார்

சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவன் எவ்வாறு குறைந்த விலையில் மக்களுக்கு விமான சேவையை வழங்குகிறார் என்ற உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சூரரைப்போற்று படத்தில் சூர்யா " நெடுமாறன் ராஜாங்கம்" ஆக வாழ்ந்து காட்டியிருப்பார்.

அபர்ணா பாலமுரளியின்

அபர்ணா பாலமுரளியின்

காதல், கோபம், அழுகை, பாசம், தவிப்பு, போராட்டம், சோகம் என அனைத்தையும் கலந்து உருவாகியிருந்த சூரரைப்போற்று திரைப்படத்தில் நெடுமாறன் ராஜாங்கத்தின் பாத்திரம் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்தது அதே அளவிற்கு அபர்ணா பாலமுரளியின் சுந்தரி என்கிற பொம்மி கதாப்பாத்திரமும் பலரையும் கவர்ந்தது.

ஓடிடி தளத்தில்

ஓடிடி தளத்தில்

இவ்வாறு அனைத்து வகையிலும் மிகச் சிறந்த திரைப்படமாக உருவாகியிருக்கும் சூரரைப்போற்று படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகியதிலிருந்தே அதற்கான எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்த நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

புதிய சாதனை

புதிய சாதனை

வெளியான முதல் நாளில் இருந்தே அனைவரிடமும் இருந்தும் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்கள் மட்டுமே வந்த கொண்டு இருக்கின்ற நிலையில் இப்பொழுது இணையதளத்தில் அதேபோன்று புதிய சாதனை ஒன்றையும் செய்துள்ளது.

சாதனையை முறியடித்துள்ளது

சாதனையை முறியடித்துள்ளது

உலக அளவில் திரைப்படங்களை ரேட்டிங் வரிசையில் வரிசைப்படுத்தும் பிரபலமான இணையதளமான ஐஎம்டிபி சூரரைப் போற்று படத்திற்கு 9 ரேட்டிங் கொடுத்து கௌரவப்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழ் திரைப்படங்களான ராட்சசன் மற்றும் விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்கள் அதிக ரேட்டிங்கை பெற்று முன்னணியில் இருந்து வந்த நிலையில் அதில் ராட்சசன் இப்பொழுது 8.7 ரேட்டிங்காக இதுவரை இருந்த சாதனையை சூரரைப் போற்று முறியடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X