சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்.. ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குநர் சுதா கொங்கரா

சென்னை: சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் தலைப்பை அறிவிக்கும் முன்பே அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் மணிரத்னம், பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. தகராறு படம் மூலம் இயக்குநராக அறிமுகமானாலும் முதல் படம் ஓரளவு வரவேற்பையே பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் மெகா ஹிட்டானது.

சூரரைப் போற்று சுதா கொங்கரா

சூரரைப் போற்று சுதா கொங்கரா

இறுதிச்சுற்று படம் குடுத்த வெற்றியை அடுத்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. ஏர் டெக்கான் நிறுவனத்தை தொடங்கிய கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து தனது கற்பனையையும் கலந்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். இதில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஓடிடியில் ரிலீஸான சூரரைப் போற்று

ஓடிடியில் ரிலீஸான சூரரைப் போற்று

இந்தப் படமானது கடந்த 2020ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் ரிலீஸானது. ஓடிடியில் ரிலீஸானாலும் படம் பக்கா தியேட்டர் மெட்டீரியலாக உருவாகியிருந்தது. படமும் மெகா ஹிட்டானது. படம் மட்டுமின்றி ஜிவி பிரகாஷ் இசையமைத்த பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் பெரிய ஹீரோக்களின் படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என்ற கதவையும் சூரரைப் போற்று படம் திறந்து வைத்தது.

தேசிய விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று

தேசிய விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று

சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ் தேசிய விருதை பெற்றனர். மேலும், சிறந்த படம், சிறந்த திரைக்கதை என சூரரைப் போற்று திரைப்படம் மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை அள்ளியது. இதனால் அந்தப் படத்தின் மீதான கவனம் தேசிய அளவில் குவிந்தது.

ஹிந்தியில் ரீமேக்காகும் சூரரைப் போற்று

ஹிந்தியில் ரீமேக்காகும் சூரரைப் போற்று

இதனையடுத்து சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காகிவருகிறது. இதில் ஹீரோவாக அக்‌ஷய் குமார் நடிக்க சுதா கொங்கராவே இயக்குகிறார்; ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இதற்கிடையே இப்படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குநர் சுதா கொங்கராவுக்கு விபத்து ஏற்பட்டு கையில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் எப்போது ரிலீஸ்?

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் எப்போது ரிலீஸ்?

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் எப்போது ரிலீஸ் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படமானது செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என்பது கவனிக்கத்தது. சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கை ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. தலைப்பு அறிவிக்கப்படும் முன்னரே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X