ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
சென்னை: சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று.
லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ஓடிடி தளமான அமேஸான் பிரைமில் ரிலீஸ் செய்யப்பட்டது.

ஜிஆர் கோபிநாத் வாழ்க்கை
சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்தது இப்படம். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

சூர்யாவின் நடிப்பு
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் சினிமா கேரியரில் சூரரைப் போற்று மாஸ்டர் பீஸ் என பாராட்டி வந்தனர். சூர்யாவின் நடிப்பு அத்தனை சிறப்பு என கொண்டாடினர் ரசிகர்கள்.

ஆஸ்கர் ரேஸில்..
சூரரைப்போற்று திரைப்படத்தை திரைத்துறை பிரபலங்கள் பலருமே பாராட்டி தீர்த்தனர். இந்நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஹேஷ்டேக் ட்ரென்டிங்
இதனை சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். #SooraraiPottru என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ட்ரெண்டிங்கில் டாப்
#SooraraiPottru ஹேஷ்டேக் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது. சூரரைப்போற்று ஆஸ்கருக்கு தேர்வாகியிருப்பதை அறிந்த இந்த ரசிகர், எல்லா கோலிவுட் ரசிகர்களுக்கும் பெருமைப்படக் கூடிய தருணம். கமல் சாருக்கு அடுத்தப்படியாக ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி இருக்க ஒரே நடிகர் நம்ம சூர்யா அண்ணா தான் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











