சூர்யாவின் சூரரைப் போற்று.. வெளியாகும் முன்பே 55 கோடிக்கு வியாபாரம்.. புது அப்டேட்!
சென்னை : தமிழில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பல படங்களில் முக்கியமான படம் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள சூரரைப் போற்று.
Recommended Video
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகுந்த பாராட்டுக்களை பெற்றது.
இந்நிலையில் சூரரைப் போற்று தியேட்டரில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படம் ஒரு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யாவின் வழக்கமாக
இயல்பாகவே சூர்யா படங்கள் என்றால் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தானாகவே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடும், ஏனென்றால் அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் கதைகளும் அவ்வாறு. புதிய கதைகளை தேர்ந்தெடுத்து புதிய இயக்குனர்களுடன் பணியாற்றுவது சூர்யாவின் வழக்கமாக இருந்து வருகிறது.

ரீமேக்கில் நடிக்காமல்
பொதுவாக பல ஹீரோக்கள் வேற்று மொழி படங்களை தமிழ் மொழியில் ரீமேக் செய்து வெற்றி பெற்று வரும் நிலையில் இதுவரை சூர்யா எந்த ஒரு ரீமேக் படத்திலும் நடிக்காமல் புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறார்.

இயக்குனராக அறிமுகம்
அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு துரோகி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா நடிகர் மாதவனை வைத்து இருதிச் சுற்று என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் மிகவும் பிரபலமானார்.

சூர்யாவுடன் இணைந்து
இறுதிச் சுற்று தமிழில் மற்றும் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் குரு என்ற பெயரில் உருவாகி அங்கேயும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இவ்வாறு தான் இயக்கிய 3 படங்களிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சுதா கொங்கரா தற்போது சூர்யாவுடன் இணைந்து இருக்கிறார்.

விமான ஓட்டியாக
ஒரு சாதாரண மனிதன் விமான ஓட்டியாக மாறுகிறான் என்ற மிக சக்தி வாய்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சூரரைப் போற்று தற்போது வெளியாக தயாராக இருக்கின்றது. சூர்யா மற்றும் சுதா கொங்கரா முதல் முறையாக இணையும் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்து உள்ளார்.

கவனத்தை ஈர்த்துள்ளது
மேலும் இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த படத்திற்க்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதற்கு முன் அசுரன் திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் சூரரைப் போற்று இசையும் தற்பொழுது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

55 கோடிக்கு
இவ்வாறு மரண மாஸாக வெளியாக உள்ள சூரரைப்போற்று திரைப்படம் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் தமிழ்நாட்டு உரிமம் மட்டும் 55 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆவலுடன் எதிர்ப்பார்த்து
இதைத் தவிர தெலுங்கு, மலையாளம் மற்றும் தொலைக்காட்சி உரிமை பற்றிய தகவல்கள் இன்னும் எதுவும் வெளியாகவில்லை. எனவே இப்போது இருக்கும் சூழ்நிலையில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் சூரரைப் போற்று திரையில் வெளியாகுமா இல்லை OTT தளத்தில் வெளியாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











