வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா.. கொல மாஸ்.. வெளியானது சூரரைப்போற்று ட்ரெயிலர்!
சென்னை: சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று.
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.

முக்கிய கதாப்பாத்திரங்கள்
இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ், நடிகை ஊர்வசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

ஓடிடி தளத்தில் ரிலீஸ்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்த படக்குழு அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் ஆன்லைன் தளத்தில் இத்திரைப்படம் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தது.

சூர்யா அறிக்கை
ஆனால் இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட சூர்யா இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி இருந்தது.

ட்ரெயிலர் ரிலீஸ்
இன்னும் சில என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் படம் திட்டமிட்டபடி 30-ந் தேதி வெளியாகாது என கூறி இருந்தார். இருந்த போதும் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியிடப்படும் என கடந்த 24ஆம் தேதியே நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

தெறிக்கவிடும் டயலாக்ஸ்
அறிவித்தப்படியே காலை 10 மணிக்கு சூரரைப்போற்று படத்தின் ட்ரெயிலர் வெளியானது. ட்ரெயிலரை பாரத்த ரசிகர்கள் அசந்துப்போயுள்ளனர். ட்ரெயிலரில் சூர்யா பேசும் ஒவ்வொரு டயலாக்குமே தெறிக்கவிட்டுள்ளது.

அப்பன் வீட்டு சொத்தா..
சூர்யாவின் ஃபிளைட்டை தரையிறக்க பெரும்புள்ளிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அப்போது, வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா.. நீ ஃப்ளைட்ட இறக்கு டா நா பாத்துக்கிறேன் என சூர்யா பேசும் வசனம் வேற லெவலில் உள்ளது.

சூர்யாவுக்கு கட்டாயம்
சூரரைப்போற்று படத்தின் ட்ரெயிலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூர்யா நடிப்பில் வெளியான கடந்த சில படங்கள் பெரிதாக பேசப்படாததால் தற்போது வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சூர்யா.
பெரிய பிரேக்கை கொடுக்கும்
இந்நிலையில் சூரரைப்போற்று படத்தின் ட்ரெயிலரை பார்த்த ரசிகர்கள் கொல மாஸ் என கொண்டாடி வருகின்றனர். சூரரைப் போற்று படம் நிச்சயம் அவருக்கு ஒரு பெரிய பிரேக்கை கொடுக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











