தீபாவளிக்கு முன்னதாக ரிலீஸாகிறது சூரரைப்போற்று.. தேதியை அறிவித்தார் சூர்யா.. டபுள் ட்ரீட்தான் போங்க!
சென்னை: சூரரைப்போற்று படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

ஓடிடியில் ரிலீஸ்
இந்தப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஓடிடி தளத்தில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது.

தள்ளி போன ரிலீஸ்
அதன்படி அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இத்திரைப்படம் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தது. ஆனால் இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இன்று ட்ரெயிலர்
இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி இந்திய விமானப் படையின் தடையில்லா சான்றிதழை பெற்ற படக்குழு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று சூரரைப்போற்று படத்தின் ட்ரெயிலர் வெளியானது.

நவம்பர் 12ஆம் தேதி
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலையும் கூறியுள்ளார். அதன்படி சூரரைப்போற்று திரைப்படம் வரும் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் குஷி
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபவளிக்கு முன்னதாக சூரரைப்போற்று படம் ரிலீஸ் ஆகவுள்ளது. சூரரைப்போற்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் குஷி மோடில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











