அந்த தேதியில இல்லையாம்.. பின் வாங்கும் சூர்யா.. சூரரைப் போற்று ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் மே மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Soorarai Pottru - Veyyon Silli Live | Sudha Kongara | Surya

இறுதிச் சுற்று படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் சுதா கொங்கரா சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கி வருகிறார்.

ஏப்ரலில் சூரரைப் போற்று திரைப்படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், படத்தின் ரிலீஸ் மே மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.

மாஸ்டர் உடன்

மாஸ்டர் உடன்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்துடன் சூர்யாவின் சூரரைப் போற்று மோத வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது, அந்த கிளாஷ் நடக்காது என்றே தெரிகிறது. சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வராது என்ற உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

எப்போ ரிலீஸ்?

உழைப்பாளர்கள் தினமான மே 1ம் தேதி சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் முடிவு செய்துள்ளதாக, சினிமா டிராக்கர் ஸ்ரீதர் பிள்ளை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ட்வீட் போட்டுள்ளார். இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டும் விஜய் ரசிகர்கள்

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம், விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்துடன் மோதும் என்றும், அந்த ரேஸில் சூரரைப் போற்று படம் தான் ஜெயிக்கும் என்றும் சூர்யா ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், இப்படியொரு அறிவிப்பு வெளியாகியுள்ளதை வைத்து, விஜய் ரசிகர்கள் சூர்யா ரசிகர்களை பயங்கரமாக ஓட்டி வருகின்றனர்.

தம்பிக்கு இருக்குற

தம்பிக்கு இருக்குற

சாஹோ படத்துடன் போட்டி போடாமல் காப்பான் பின் வாங்கியது, சர்காருடன் மோதாமல் என்.ஜி.கே ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் கார்த்தியின் கைதி திரைப்படம் கெத்தாக ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பையும் வசூலையும் ஈட்டியது. தம்பி கார்த்திக்கு இருக்குற தைரியம் கூட அண்ணன் சூர்யாவுக்கு ஏன் இல்லை என கலாய்த்து வருகின்றனர்.

அப்பவும் கிளாஷ் இருக்கு

அப்பவும் கிளாஷ் இருக்கு

உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி சூரரைப் போற்று படம் ரிலீஸ் ஆனால், அதே தேதியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் ஜெயம் ரவியின் பூமி படத்துடன் மிகப்பெரிய கிளாஷ் இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதுவரை ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அருவாவும் தள்ளிப் போகும்

அருவாவும் தள்ளிப் போகும்

சூர்யா படங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுடன் போட்டி போடுவதை தவிர்த்து வருகிறது. தீபாவளிக்கு வலிமை படம் ரிலீஸ் ஆனால், அப்போதும், ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யாவின் அருவா ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போகும் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X