ரிலீசுக்கு முன்பே லீக்கான சூரரைப் போற்று.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
சென்னை: அமேசான் பிரைமில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக இருந்த சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீசுக்கு முன்பே இணையத்தில் கசிந்து விட்டது.
Recommended Video
இதனை அறிந்து கொண்ட நடிகர் சூர்யா, உடனடியாக சூரரைப் போற்று திரைப்படத்தை அமேசான் பிரைமில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உத்தரவிட்டுள்ளார்.
சூர்யாவின் ரசிகர்கள், நள்ளிரவ் வரை காத்திருக்காமல் அமேசான் பிரைமில் சூரரைப் போற்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

எப்படி கசிந்தது
சூர்யாவின் சூரரைப் போற்று, அமேசான் பிரைம் இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில வெளிநாடுகளில் நேர மாற்றம் காரணமாக இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. டிஜிட்டல் உலகம் என்பதால், முதல் ஷோ முடிந்ததும், படத்தை இந்தியாவிலும் லீக் செய்து விட்டனர்.
அமேசானில் ரிலீஸ்
ஆன்லைனில் கசிந்த தகவல் தெரிந்த நிலையில், நடிகர் சூர்யா படத்தை நள்ளிரவு வரை காத்திருந்து வெளியிட வேண்டாம் இப்பவே ரிலீஸ் பண்ணிடலாம் என அமேசான் பிரைமுக்கு அனுமதி வழங்க இந்தியாவிலும் சூரரைப் போற்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

படம் எப்படி இருக்கு?
இறுதிச்சுற்று படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி உள்ள சூரரைப் போற்று எப்படி இருக்கிறது என்கிற விமர்சனங்களும் சமூக வலைதளத்தில் குவிய ஆரம்பித்து விட்டன. படம் எதிர்பார்த்ததை விட வேற லெவலில் மிரட்டுகிறது என்றும், ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தீபாவளி ட்ரீட்
சூர்யாவின் ரசிகர்களுக்கு சூரரைப் போற்று திரைப்படம் நிச்சயம் ஒரு சூப்பரான தீபாவளி பரிசாகவே அமைந்துள்ளது. ஒவ்வொரு ஃபிரேமிலும் சூர்யாவின் கடின உழைப்பு மற்றும் சுதா கொங்கராவின் சின்சியாரிட்டி தெரிகிறது என்றும் பாராட்டி வருகின்றனர். வெறும் 60 நாட்களில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா? என்றும் வியந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications