சூரரை போற்று அப்டேட்: ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 70ஆவது படம்
Recommended Video
சென்னை: நடிகர் சூர்யா நடிக்கும் சூரரை போற்று படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ஜீ.வி.பிராகாஷ் அதனை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் படத்தின் இசைக்கான ப்ரி ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பித்து விட்டதாகவும் ஆரம்பத்திலேயே படத்தின் ஆரம்ப காட்சிகளுக்காக பின்னணி இசையமைத்து வருவதாக கூறியுள்ளார். அதற்கு பின் ஜி வி 70 என்ற ஹாஸ்டேக்கையும் போட்டிருந்தார்.
சூரரை போற்று ,நடிகர் சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கார இயக்கத்தில் உருவாகி வரும் படம். இதற்கு இசையமைத்து வருகிறார் ஜி வி.பிராகாஷ். இந்த படத்தின் கதாநாயகியாக சர்வம் தாளமயம் படத்தில் நடித்த மளையாள நடிகையான அபர்னா பாலமுரளி நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவே தனது 2டி எண்டர்டெயிண்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ஜி.வி.பிராகாஷ் அதனை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் படத்தின் இசைக்கான ப்ரி ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பித்து விட்டதாகவும் ஆரம்பத்திலேயே படத்தின் ஆரம்ப காட்சிகளுக்காக பின்னணி இசையமைத்து வருவதாக கூறியுள்ளார். அதற்கு பின் ஜி.வி 70 என்ற ஹாஸ்டேக்கையும் போட்டிருந்தார்.
அவர் நடிக்க வருவதற்கு முன்பே 50 படங்களுக்கு இசையமைத்து இருந்தார். டார்லிங் படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், அதற்கு பின் பல படங்களில் நடித்து விட்டார். தன் படத்தை தவிர்த்து வேறு எந்த படத்திற்கும் இசை அமைக்காத ஜி வி, தற்போது அசுரன் படத்திற்கு இசையமைத்து விட்டு சூரரை போற்று படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் ஜி.வி என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது பல நல்ல இசையும் பாடல்களும் தான். நடிப்பிலும் இசையை போல் சாதித்து விட வேண்டும் என்று துடிக்கும் ஜி.விக்கு ரசிகர்களின் வேண்டுகொள், மீண்டும் அவர் முழு நேரமும் இசையமைக்க வேண்டும் என்பதே. ஜீ.வி என்ன முடிவெடுப்பார் என்பதை நாம் காத்திருந்து பார்ப்போம்
சூர்யா தனது காப்பான் படத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பின் இப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் இதில் பல புது முகங்களும் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











