மதுரைனாலே மாஸ் தானே.. தியேட்டரில் வெளியான சூரரைப் போற்று.. மேள தாளத்துடன் தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
சென்னை: தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை தவறவிட்ட சூர்யா ரசிகர்களுக்காக மதுரையில் உள்ள திரையரங்கில் சூரரைப் போற்று திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
விஷாலின் வீரமே வாகை சூடும் படத்திற்கு கூட இந்த அளவுக்கு FDFS ஓப்பனிங் இருந்திருக்காது. அந்த அளவுக்கு அமர்க்களம் செய்து விட்டனர் மதுரையை சேர்ந்த சூர்யா ரசிகர்கள்.
மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடிக்க தியேட்டரில் ஆட்டம் பாட்டத்துடன் ஒவ்வொரு காட்சியையும் பெரிய திரையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நேரடியாக ஒடிடியில்
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் வெளியானது. உலகளவில் ஒடிடி ரசிகர்களை கவர்ந்த அந்த திரைப்படம் சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டது.

வருத்தத்தில் ரசிகர்கள்
நடிகர் சூர்யாவின் முந்தைய படங்கள் சொதப்பிய நிலையில், சூரரைப் போற்று நிச்சயம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படியொரு படத்தை பெரிய திரையில் காண முடியவில்லையே என்கிற வருத்தம் நிறையவே இருக்கு. சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தையும் ஒடிடியிலேயே வெளியிட்டு ரசிகர்களை மேலும், அப்செட் ஆக்கினார் சூர்யா.
மதுரை தியேட்டரில்
இந்நிலையில், சூரரைப் போற்று திரைப்படம் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று வெளியாகி உள்ளது. FDFS கொண்டாட்டத்தை தியேட்டருக்கு வெளியே ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்கியும் கொண்டாடியதை பார்த்த மற்ற மாவட்ட சூர்யா ரசிகர்கள் பொறாமையா இருக்கு மதுரையன்ஸ் என கமெண்ட் போட்டு பாராட்டி வருகின்றனர்.

மண்ணுருண்ட பாடலுக்கு
சூரரைப்போற்று படத்தின் மண்ணுருண்ட பாடலுக்கு தியேட்டரில் விசில் தெறிக்க ரசிகர்கள் எழுந்து நடனமாடியது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. மற்ற மாவட்ட ரசிகர்கள் இதெல்லாம் ஒரு ட்ரீம் என கண்ணீர் விட்டு வருகின்றனர். விரைவில் மற்ற மாவட்டங்களிலும் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எதற்கும் துணிந்தவன் FDFS மிரட்டும்
சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் என கடந்த இரு படங்களில் வேற லெவல் நடிப்பு மற்றும் கதையை சொல்லி ரசிகர்களை உணர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்ற நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் FDFS எப்படி மிரட்டப் போகுது என இப்பவே சூர்யா ரசிகர்கள் நினைத்துப் பார்த்து ரெக்கார்டு பிரேக்கிங் வசூலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











