யூடியூப் டாப் 100 பாடல்களில்.. சூரரைப் போற்று “காட்டுப் பயலே” பாட்டுக்கு கிடைத்த சூப்பரான இடம்!
சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள "காட்டுப் பயலே" பாடல் யூடியூபின் டாப் 100 பாடல்கள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறது.
இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு, இயக்குநர் சுதா கொங்கரா சூர்யாவுடன் இணைந்து உருவாக்கி உள்ள படம் சூரரைப் போற்று.
இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

ரெளடி பேபியின் ரகளை
ஏ சண்டக்காரா, ரெளடி பேபி என ரசிகர்கள் கொண்டாடும் பாடல்களை பாடி அசத்தி வரும் பாடகி தீ பாடிய "காட்டுப் பயலே" பாடலுக்கு யூடியூபில் நல்லதொரு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, "காட்டுப் பயலே" பாடலின் ஒரு நிமிட வீடியோவை படக்குழு வெளியிட்டனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் மேஜிக்
அசுரன் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்துள்ள ஜி.வி. பிரகாஷ், ஒவ்வொரு பாடலையும் சும்மா இசையால் செதுக்கி இருக்கிறார். விவேக் வரிகளில் வெளியான வெய்யோன் சில்லி, மண்ணுருண்ட மேல மனுச பய ஆட்டம் பாரு உள்ளிட்ட பாடல்களை தொடர்ந்து, வெளியான காட்டுப் பயலே பாடலும் ரசிகர்களை திரும்ப திரும்ப கேட்க தூண்டும் விதமாக உள்ளது.
28வது இடம்
இந்த வாரத்திற்கான யூடியூப் இந்தியாவின் சிறந்த டாப் 100 பாடல்களில், எண்ணற்ற பாலிவுட் பாடல்களும், டோலிவுட் பாடல்களும் இடம்பிடித்து உள்ள நிலையில், தமிழ் பாடலான "காட்டுப் பயலே" பாடல் 28வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தீபாவளி கிளாஷ்
ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் சூரரைப் போற்று படம், கொரொனா பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 9ம் தேதி உருவாக வேண்டிய சூரரைப் போற்று vs மாஸ்டர் கிளாஷ் தீபாவளிக்கு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களை தொற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படங்கள் தீபாவளிக்கு மோதியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











