சூப்பர் பர்த்டே கிஃப்ட்.. வெளியானது சூர்யாவின் சூரரைப் போற்று ‘காட்டுப் பயலே’ ஒரு நிமிட வீடியோ!

சென்னை: சூரரைப் போற்று படத்தின் அடுத்த சிங்கிளான 'காட்டுப் பயலே' பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Suriya Birthday CDP detailed • Soorarai Pottru

நடிகர் சூர்யாவின் 45வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சூர்யாவின் ரசிகர்கள், பல்வேறு நலப் பணிகளையும் இன்று செய்து வருகின்றனர்.

ரிலீசுக்காக காத்திருப்பு

ரிலீசுக்காக காத்திருப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது.

ராணா வெளியிட்ட டிபி

ராணா வெளியிட்ட டிபி

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்கள் சில தினங்களுக்கு முன்பாக பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான இன்று, சூரரைப் போற்று படத்தில், ஒரு சாமானிய இளைஞன், வானில் பறக்கும் ஏரோ பிளேனை பிடிக்க பறப்பது போல இருக்கும் சூப்பர் போஸ்டருடன் ஹேப்பி பர்த்டே டிபியை வெளியிட்டு இருக்கிறார்.

பர்த்டே ட்ரீட்

பர்த்டே ட்ரீட்

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூர்யா ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுக்கும் விதமாக, "காட்டுப் பயலே" பாடலின் ஒரு நிமிட வீடியோ பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாடலின் விஷுவல்ஸ், இசை எல்லாம் வேற ரகம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பாடகி தீ

ஏ சண்டக்காரா, ரவுடி பேபி, உசுரு நரம்புல, வானில் இருள் என சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஹிட் மெஷின் பாடகி Dhee எனும் தீக்‌ஷிதா இந்த பாடலை பாடியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில், தீ பாடியுள்ள பாடலுக்கு அபர்ணா பாலமுரளி தனது நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார். ஒவ்வொரு பிரேமையும் சுதா கொங்கரா செதுக்கி இருப்பது சூப்பர். அதிலும் சூர்யாவின் கல்யாண காட்சிகள் அமர்க்களம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X