சூர்யா ரசிகர்களுக்கு இன்னைக்கு நியூ இயர் ட்ரீட் இருக்கு.. செகண்ட் லுக் ஆன் தி வே!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூரரைப் போற்று படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2020 புத்தாண்டுக்கு சூர்யா ரசிகர்களுக்கு எந்தவொரு ட்ரீட்டும் இல்லையா என ஏங்கி இருந்த சூர்யா ரசிகர்கள் தற்போது செம ஹேப்பி ஆகி உள்ளனர்.
#SooraraiPottruSecondLook என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
மாஸ் அப்டேட்
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தின் செகண்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற மாஸ் அப்டேட்டை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக்
சூரரைப் போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வானத்தில் பறப்பது போல நடிகர் சூர்யா, பாடி பில்டிங்கான உடற்கட்டுடன் தரையில் இருந்து மேலே பறக்கும் ஃபர்ஸ்ட் லுக் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே., காப்பான் என அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை விமர்சன ரீதியாக பெறவில்லை. இந்நிலையில், இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரைப் போற்று சூர்யாவின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாறன் ஆட்டம் ஆரம்பம்
மாலை முதல் மாறனின் ஆட்டம் ஆரம்பம் என சூர்யா ரசிகர்கள் ட்வீட் போட்டு ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஜி.வி. பிரகாஷ் ட்வீட்
சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்து வரும் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று செகண்ட் லுக் குறித்த அப்டேட் ட்வீட்டை போட்டுள்ளார். அசுரன் படம் அளவுக்கு பி.ஜி.எம். தெறிக்கவிடணும் அண்ணா என சூர்யா ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











