தோல்விக்கு இடையில் ஒரே ஆறுதல்.. இனிமேல்தான் ஆட்டமே இருக்கு.. சூர்யா ரசிகர்கள் ஒரு குட் நியூஸ்!

சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று படத்தின் தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டது.

Recommended Video

காப்பானை யாராவது காப்பாற்றுங்கள்..! கதறும் சூர்யா ரசிகர்கள் !

சென்னை: சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று படத்தின் தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டது. இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சூர்யா இணைந்திருக்கும் படம் சூரரைப் போற்று. இறுதிச் சுற்று படத்திற்கு பின் சூர்யாவிடம் இந்த கதையை சுதா கூறி இருக்கிறார்.

அதன்பின் சிறிய இடைவெளிக்கு பின் இந்த படத்தின் வேலைகள் தொடங்கியது. சென்னை, அமெரிக்கா, உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்திற்கான பணிகள் நடந்தது.

போஸ்டர்

போஸ்டர்

இதுவரை இந்த படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியாகி உள்ளது. விமானம் ஒன்றுக்கு அருகே சூர்யாவின் முதுகுப்புறம் தெரிய, வேட்டி கட்டி நிற்கும் வகையில் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பின் இந்த படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

யார் நடிக்கிறார்

யார் நடிக்கிறார்

பிரபல மலையாள நடிகை அபர்ணா முரளி இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்தின் கதை நிஜ வாழ்க்கையில் நடந்த கதை என்றும் தகவல்கள் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி. ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை கதை இது என்று தகவல்கள் வந்தது.

அதிரடி

அதிரடி

இந்த படத்தில் நிறைய அதிரடியான திருப்பங்கள் இருக்கும். நிறைய சுவாரசியமான சீன்கள் இருக்கும் என்று கூறுகிறார்கள். நடிகர் சூர்யாவிற்கு இது வித்தியாசமான படமாக இருக்க போகிறது. அவருக்கு இது பெரிய பிரேக் கொடுக்க போகிறது என்று கூறுகிறார்கள்.

எத்தனை

எத்தனை

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவோடு முடிந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு அல்லது புத்தாண்டிற்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. போஸ்ட் புரடெக்சன் பணிகள் இதற்காக நடந்து வருகிறது.

ஹாப்பி

ஹாப்பி

சூர்யா ரசிகர்கள் இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். வரிசையாக சூர்யா படம் தோல்வி அடைந்து வருகிறது. காப்பான் படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் மட்டுமே வந்துள்ளது . இதனால் சூரரைப் போற்று படம் வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X