இன்னும் எதற்காக காத்திருக்க வேண்டும்.. மீண்டும் இணையும் சூரரைப்போற்று கூட்டணி!

சென்னை : சுதா கொங்கரா புதிதாக இயக்கவுள்ள படமொன்றில் நாயகனாக சூர்யா நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் என்பதே அரிதான விஷயமாக உள்ள நிலையில், தனக்கென தனி இடம் பிடித்து. வெற்றி மேல் வெற்றியாக குவித்து வருகிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

துரோகி என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த சுதா கொங்கரா மாதவனை வைத்து இயக்கிய இறுதிச்சுற்று படம் மூலமாக கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ளார்.

சூரரைப் போற்று

சூரரைப் போற்று

சுதா கொங்கரா, சூர்யாவை வைத்து இயக்கிய படம் சூரரைப் போற்று. இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்த இந்த படம் 2020 ம் ஆண்டு நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. இருந்தாலும் பிரம்மாண்ட வெற்றியை இந்த படம் பெற்றது.

பல சாதனை

பல சாதனை

ஓடிடியில் அதிக முறை பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்த சூரரைப் போற்று, சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்றுள்ளது. சிறந்த சர்வதேச படங்களின் பட்டியலிலும் இடம்பெற்று, புதிய சாதனை படைத்தது. ஆஸ்கார் விருதிற்காகவும் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. தமிழில் பிரம்மாண்ட சாதனை படைத்து, உலக பாப்புலர் ஆன சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்யவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது,

சோனி விருது

சோனி விருது

இதனிடையே, சூரரைப் போற்று படத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதற்கு சோனி நிறுவனம் விருது வழங்கியுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சிறப்பாக வரவேற்பைப் பெற்ற திரைப்படம் என்கிற அங்கீகாரத்தை எங்களுக்குக் கொடுத்த சோனி மியூஸிக் சவுத்துக்கு நன்றி. சுதா கொங்கரா, சூர்யா, ராஜசேகர் பாண்டியன் உள்ளிட்டோருக்கு நன்றி. மீண்டும் சூரரைப் போற்று குழுவுடன் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார்.

எதற்கு காத்து இருக்கனும்

எதற்கு காத்து இருக்கனும்

ஜி.வி.பிரகாஷ் ட்விட்டை ரீட்விட் செய்துள்ள சூர்யா, என்ன சிறப்பான பாட்டு, அற்புதமான பயணம், ஜிவி மற்றும் சுதாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இன்னும் எதர்க்காக காத்திருக்க வேண்டும் சுதா... என்று சூர்யா கேட்டுள்ளார். இதையடுத்து இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X