சூர்யா ரசிகர்களுக்கு இன்னைக்கு செம்ம வேட்டை.. சாயங்காலம் வருது சூரரைப் போற்று டீசர்!

Recommended Video

Soorarai Pottru Official Teaser| Sudha Kongara | Surya |Review

சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

2டி நிறுவனம் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வருகிறது சூரரைப் போற்று திரைப்படம்.

இறுதிச்சுற்று மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கும் படம் என்பதால், சூர்யாவுக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய கம்பேக் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயோபிக் படமா?

பயோபிக் படமா?

ஏர் டெக்கான் நிறுவனம் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு படத்தைத் தான் சூரரைப் போற்று என்ற பெயரில் சுதா கொங்கரா இயக்கி வருகிறார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இந்த படம் பயோபிக் கிடையாது. அவருடைய கதையை வாங்கிய சுதா கொங்கரா அதை மையப்படுத்தி கமர்ஷியல் கலந்து வேறு ஒரு புதிய கதையாக உருவாக்கியுள்ளார்.

என்ன கதை

என்ன கதை

சாதாரண கிராமத்து இளைஞன், வானத்தில் பறக்க ஆசைப்படுவதும் அதற்காக அந்த இளைஞன் எடுக்கும் முயற்சிகளும், அதில் அவனுக்கு கிடைக்கும் தோல்விகளும், தோல்விகளை வெற்றியாக இறுதியில் எப்படி அந்த இளைஞன் மாற்றுகிறான் என்பது தான் சூரரைப் போற்று படத்தின் கதையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

மாறா

மாறா

சூர்யா இந்த படத்தில் மாறா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மாறா என்ற கதாபாத்திர பெயரை பார்த்தவுடனே இந்த படம் கோபிநாத்தின் பயோபிக் இல்லை என்பது தெளிவாக விளங்கிவிடும். மாறா கதாபாத்திரத்திற்காக தன்னை முற்றிலும் செதுக்கி நடித்துள்ளார் சூர்யா.

இவ்ளோ சீக்கிரம் ஏன்?

இவ்ளோ சீக்கிரம் ஏன்?

தம்பி இசை வெளியீட்டு விழாவில் சீக்கிரமே சந்தோஷமான செய்தி கிடைக்கும் என ரசிகர்களுக்கு சூர்யா சொன்னார். அந்த சந்தோஷமான செய்தி இதுதான். கோடை விடுமுறையில் படம் ரிலீசாக உள்ள நிலையில், இவ்வளவு சீக்கிரமாக டீஸரை வெளியிட வேறு சில வியாபார நோக்கங்களும் இருக்கின்றதாம்.

5 மணிக்கு

5 மணிக்கு

சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியான நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சூரரைப் போற்று டீஸர் வெளியாகவுள்ளது. மாறனின் ஆட்டத்தை ரசிக்க சூர்யா ரசிகர்கள் வெறியோடு காத்திருக்கின்றனர்.

கம்பேக்

கம்பேக்

சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே., காப்பான் என சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், பிளாக்பஸ்டர் ஹிட் ஆகவில்லை. அதேபோல விமர்சன ரீதியாக இதில் எந்த படமும் வெற்றிபெறவில்லை. இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரைப் போற்று சூர்யாவுக்கு நிச்சயம் கம்பேக் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரெண்டிங்

டிரெண்டிங்

இன்று மாலை 5 மணிக்கு சூரரைப் போற்று டீசர் வெளியாகவுள்ள நிலையில், காலையில் இருந்தே சூர்யா ரசிகர்கள் ட்விட்டரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இன்று மாலை சூரரைப் போற்று டீசர் வெளியானதும் வேற லெவல் டிரெண்ட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சாதனைகளை முறியடிக்குமா?

சாதனைகளை முறியடிக்குமா?

பிகில், தர்பார் டீசர் சாதனைகளை சூர்யாவின் சூரரைப் போற்று டீசர் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் பல ரெக்கார்டுகளை பிரேக் செய்ய காத்திருக்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை பார்க்க காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X