பாலிவுட்டுக்கு செல்லும் சூரரைப் போற்று.. சூர்யா ரோலில் அங்க நடிக்க போறது யார் தெரியுமா?
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு காத்திருக்கும் சூரரைப் போற்று படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு மற்றும் ஜாக்கி ஷெராப் நடிப்பில் சூரரைப் போற்று படம் உருவாகி இருக்கிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் வெளியீடு தாமதம் ஆகிக் கொண்டே போகிறது.

தியேட்டர் ரிலீஸ்
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை போல சூர்யாவின் சூரரைப் போற்று நேரடியாக ஆன்லைனில் வெளியாகாது என்ற உறுதியை தனது நடிகர்களுக்கு சூர்யா கொடுத்துள்ளார். தியேட்டரில் சூரரைப் போற்று FDFS கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

என்ன சொல்லப் போறாரோ
சூர்யாவின் படங்களையும் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளையும் சம்பந்தப்படுத்தி ஏகப்பட்ட மீம்கள் சமூக வலைதளத்தில் பறக்கின்றன. கஜினி படத்தில் சூர்யாவின் டைரியில் ஜூன் 21 கடைசி பக்கமாக இருந்த நிலையில், மாயன் காலண்டர், உலகம் அழிவை அப்பவே சூர்யா சொல்லிட்டாரு என கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை நெட்டிசன்கள் வெய்யோன் சில்லியை போல சூர்யாவை மீண்டும் ஒரண்ட இழுத்தனர்.

பாலிவுட்டில்
சூரரைப் போற்று ரீமேக் தாமதம் ஆனாலும், அந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மற்றும் பிசினஸ் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கிறது. தற்போது, பாலிவுட்டில் அந்த படத்தை ரீமேக் செய்ய பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று முன் வந்துள்ளதாகவும், சமீபத்தில் தொடர்ந்து ரீமேக் படங்கள் மீது கவனம் செலுத்தி வரும் பிரபல பாலிவுட் நடிகரை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் நடிகர்
கடந்த ஆண்டு அர்ஜுன் ரெட்டி படத்தை பாலிவுட்டில் கபீர் சிங் என ரீமே செய்து 350 கோடி வசூலை சாதித்துக் காட்டிய நடிகர் ஷாகித் கபூர் தான், சூரரைப் போற்று பட இந்தி ரீமேக்கிலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நானியின் ஜெர்ஸி பட ரீமேக்கில் நடித்து வரும் அவர், அடுத்ததாக சூரரைப் போற்று படத்திலும் நடிக்கப் போகிறாராம்.
Recommended Video

இயக்கமும் இசையும்
அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவை வைத்து பாலிவுட்டில் கபீர் சிங் படத்தை இயக்கி இருந்தனர். இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்திலேயே சூரரைப் போற்று படத்தை பாலிவுட்டில் இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவும் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











