இப்ப வந்து மோதுடா.. ரிலீசாவதற்கு முன்பே 100 கோடி பிசினஸ்.. டிரெண்டாகும் #SooraraiPottruHits100crPB
சென்னை: தியேட்டரில் ரிலீஸ் செய்தால் தான் 100 கோடி பிசினஸ் பண்ண முடியும் என்ற நம்பிக்கைகளை ஒடிடியில் ரிலீஸ் செய்தாலே அள்ளலாம் என உடைத்து எறிந்து இருக்கிறார் நடிகர் சூர்யா.
Recommended Video
அதுவும் ரிலீஸ் ஆவதற்கு முன்பே என்பது தான் இதில் சூப்பரான விஷயம்.
அந்த சந்தோஷத்தை சூர்யா ரசிகர்கள் #SooraraiPottruHits100crPB என்ற ஹாஷ்டேக் உருவாக்கி அதகளப்படுத்தி வருகின்றனர்.

அதிரடி முடிவு
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று திரைப்படம், தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல், நேரடியாக வரும் அக்டோபர் 30ம் தேதி ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற அதிரடி அறிவிப்பை நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியிட்டு, ஒட்டுமொத்த கோலிவுட்டின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார்.

எதிர்ப்புகள் கிளம்பின
சூர்யாவின் இந்த அதிரடி முடிவு தியேட்டர் உரிமையாளர்களையும், சினிமா விநியோகஸ்தர்களையும் கொந்தளிக்கவே செய்தது. சூர்யா தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அவருடன் பல படங்களில் பணிபுரிந்த இயக்குநர் ஹரியே பகிரங்க கோரிக்கையும் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா ஆதரவு
கொரோனா பரவல் மற்றும் தியேட்டர்கள் திறக்க முடியாத சூழல்களை நன்கு ஆலோசித்தே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக நடிகர் சூர்யா கூறிய பின்னரும், அவரை டார்கெட் செய்வது தேவையற்ற செயல் என்றும், ஒரு முன்னணி நடிகருக்கு சினிமா உலகம் துணை நிற்காமல் போவது தவறான விஷயம் என்றும் தனது ஆதரவை இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கம்மி காசுக்கு
மேலும், சூர்யாவின் சூரரைப் போற்று கம்மி காசுக்கு அமேசான் பிரைமிடம் விற்கப்பட்டதாகவும், தியேட்டரில் வெளியாகி இருந்தால், 100 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வந்தன. சூர்யாவின் மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் ஏகப்பட்ட வசை பேச்சுக்கள் வலம் வந்தன.

ரிலீசுக்கு முன்பே நூறு கோடி
இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் சூர்யாவின் சூரரைப் போற்று வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் சுமார் 200 நாடுகளில் ஒளிபரப்ப உள்ளதாக சூப்பரான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், ரிலீசுக்கு முன்பே சூரரைப் போற்று திரைப்படம் 100 கோடிக்கும் மேல் ப்ரீ பிசினஸ் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











