வேற லெவல் மாறா.. சூர்யாவின் சூப்பர் ஹிட் தள்ளிப் போகுதே.. டிரெண்டாகும் சூரரைப் போற்று மேக்கிங்!

சென்னை: இந்த சம்மரில் சூர்யாவின் சூரைப் போற்று ரிலீசை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, கொரோனா கலவரம் ஏமாற்றத்தை தந்துள்ளது.

Recommended Video

Soorarai Pottru- Mannurunda Lyrical video | Surya | G.V.Prakash | Sudha Kongara

ஆனாலும், அந்த சோகத்தை போக்க, சூர்யாவின் சூரரைப் போற்று மேக்கிங் நிகழ்ச்சி இன்று காலை சன் டிவியில் ஒளிபரப்பாகி, இந்த தமிழ் புத்தாண்டுக்கு சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் பரிசை வழங்கி இருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று நிச்சயம் சூர்யாவுக்கு ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக்கிங் ஸ்பெஷல்

பிரபல தனியார் தொலைக்காட்சியன சன் டிவி தொடங்கிய நாளை கொண்டாடும் விதமாக பல புதிய படங்களும், ஸ்பெஷல் நிகழ்ச்சிகளும் போடப்பட்டு வருகின்றன. காலையிலேயே சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் காலை 9 மணிக்கு சூரரைப் போற்று மேக்கிங் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

டிரெண்டிங்

சூரரைப் போற்று படத்தின் ரிலீசுக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த கொரோனா பாதிப்பு, இன்னும் கொஞ்ச மாதங்கள் காத்திருக்க வைத்துள்ளது. சூரரைப் போற்று ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ள சோகத்தில் இருக்கும் ரசிகர்கள், இந்த மேக்கிங் நிகழ்ச்சியை பார்த்து உற்சாகமடைந்து #SooraraiPottruMakingSpecial என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கடின உழைப்பு

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு உரிமையை வாங்கிய இயக்குநர் சுதா கொங்கரா, அதில், சற்று புனைவுகளை சேர்த்து, சாமானிய மனிதன் எப்படி விமான சேவையை தொடங்கினான் என்ற கதையை உருவாக்கி உள்ளார். விமானம் சம்பந்தம் பட்ட கதை என்பதால், செட் ஒர்க்கில் இருந்து ஒவ்வொரு விஷயத்திலும் கடின உழைப்பை படக்குழு போட்டுள்ளனர்.

மாறா லுக்

சூரரப் போற்று டீசரில் வெளியான லுக்கை விட தற்போது, பிரத்யேகமான சூர்யாவின் மாறா லுக் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நீண்ட முடி மற்றும் தாடியுடன், கூலர்ஸ் அணிந்து செம ஸ்வாகாக சூர்யா இருக்கும் அந்த லுக்கை பார்த்த சூர்யா ரசிகர்கள் தங்கள் தலைவனை எப்போது வெள்ளித் திரையில் காண்போம் என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

மண்ணுருண்ட மேக்கிங்

மேலும், அந்த லுக், சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள "மண்ணுருண்ட மேல மனுஷன் பையன் ஆட்டம் பாரு" என்ற பாடலில் இடம்பெற்றிருப்பது, இன்று ஒளிபரப்பான சூரரைப் போற்று மேக்கிங் மூலம் தெரியவந்துள்ளது. சூர்யா ரசிகர்கள், சன் டிவியில் ஒளிபரப்பான அந்த மேக்கிங் வீடியோவை ஸ்க்ரீன் ஷாட்களாக எடுத்து ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X