டபுள் ட்ரீட் கொடுத்துட்ட தலைவா.. சூரரைப் போற்று செகண்ட் லுக் ரிலீஸ்.. சூர்யா ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: சூரரைப் போற்று செகண்ட் லுக்குக்காக காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு ரெண்டாவது லட்டாக சூரரைப் போற்று டீஸர் வரும் ஜனவரி 7ம் தேதியே வருகிறது என்ற மாஸ் அப்டேட்டையும் சேர்த்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
கோடை விடுமுறைக்கு சூரரைப் போற்று வெளியாகவுள்ள நிலையில், இவ்வளவு சீக்கிரமாக அதுவும் பொங்கலுக்கு முன்பாகவே டீஸர் விடுவதற்கான காரணம் என்ன என ஒரு பக்கம் கோலிவுட் தலை பிய்த்துக் கொண்டிருக்கையில், தலைவர் தரிசனம் இன்னும் சில தினங்களில் கிடைக்கப் போகிறது என்ற உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள செகண்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.
இது போதும் தலைவா
சூரரைப் போற்று செகண்ட் லுக் மற்றும் டீஸர் அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், இது போதும் தலைவா என்ற அர்த்தத்தில் சூர்யா ரசிகர்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்
கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய்க்கு சொல்லப்படும் வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான் என்ற வசனத்தை சூர்யாவுக்கு போட்டு ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
வெறித்தனம் தலைவா
செகண்ட் லுக் போஸ்டர் வெறித்தனமாக இருக்கிறது என இந்தர் ரசிகர் வெறித்தனம் தலைவா என கமெண்ட் செய்துள்ளார்.
உலகளவில் டிரெண்ட்
சூரரைப் போற்று செகண்ட் லுக் போஸ்டர் ஹாஷ்டேக் உலகளவில் டிரெண்டாகி வருவதை ஸ்க்ரீன் ஷாட் போட்டு இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
சூரரைப் போற்று நாயகி
சர்வம் தாள மயம் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளி தான் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். செகண்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்துள்ள அவர், உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என நினைக்கிறேன் என கேப்ஷன் போட்டுள்ளார்.
கண்ணு பேசும்
எல்லா படத்திலேயும் அண்ணாவோட கண்ணு பேசும் பாருங்க என சூர்யாவின் ரசிகர்கள் செகண்ட் லுக் போஸ்டரை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.
பருந்தாகுது ஊர்க்குருவி
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்ற பழமொழியை பொய்ப்பிக்கும் வரிகளில் சூரரைப் போற்று படத்தில் பருந்தாகுது ஊர்க்குருவி என்ற பாடல் இடம்பெற்றுள்ளதை ட்வீட் போட்டு ரிவீல் செய்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.


Click it and Unblock the Notifications











