Soori: விசுவாசத்துல நாயையே மிஞ்சிடுவான் இந்த சொக்கன்.. சூரியின் கருடன் க்ளிம்ப்ஸ் எப்படி இருக்கு?

சென்னை: வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷ்னி ஹரிப்ரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கருடன் படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

காமெடி நடிகராக வலம் வந்த சூரி சமீப காலமாக அதிரடி நாயகனாக மாறி வருகிறார். கதை சார்ந்த படங்களில் நடித்து ஹீரோவாக வளர வேண்டும் என அவர் எடுத்த முதல் முயற்சியே அவருக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. விடுதலை படத்தில் சூரி சிறப்பாக நடித்த நிலையில், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Soori and Sasikumar Garudan glimpse out now

சிக்ஸ் பேக் வைத்த சூரி: சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் ஒரே ஒரு காமெடி காட்சிக்காக அதிரடியாக சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து அந்த படத்தில் சிவகார்த்திகேயனையே ஓவர் டேக் செய்திருந்தார் சூரி. அடுத்து விடுதலை படத்தில் நேர்மையான காவல் துறை அதிகாரியாக அவர் நடித்த நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விடுதலை 2ம் பாகத்தை சூரிக்காகவே பார்க்க அவரது ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

விஜய்க்கு எழுதப்பட்ட கதையா?: இயக்குநர் வெற்றிமாறன் கருடன் எனும் படத்தில் விஜய்யை வைத்து இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஷாருக்கான் ஒதுக்கியதை போலவே தொடர்ந்து விஜய்யும் வெற்றிமாறனுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் தவிர்த்து வருகிறார். இந்நிலையில், அந்த கருடன் கதையை தான் சூரிக்கு வெற்றிமாறன் தூக்கி கொடுத்து விட்டாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த படத்தை துரை செந்தில் குமார் இயக்கி உள்ளார்.

நாயை விட விசுவாசமான சொக்கன்: மலையாள நடிகரான உன்னி முந்தன் மற்றும் சசி குமார் செங்கல் சூளையில் உட்கார்ந்திருக்க ஒருவன் அங்கிருந்து தப்பித்துச் செல்கிறான். ஒரு பிளாஸ்டிக் பிளேட்டை வீசி எறிய நாய் கவ்விக் கொண்டு வருகிறது. அந்த நாயை விட விசுவாசமானவன் சொக்கன் என ஓடிச் சென்ற நபரிடம் செங்கலால் அடியெல்லாம் வாங்கிக் கொண்டு சூரி துரத்திக் கொண்டு ஓடி நாய்க்கு முன்னதாக கொண்டு வந்து சசிகுமாரின் காலுக்கு அடியில் போடும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

சசிகுமார் தான் வில்லனா?: இப்படி விசுவாசமாக இருக்கும் சூரி ஒரு கட்டத்தில் முதலாளியை எதிர்த்து புரட்சிப் பேசி ஹீரோயிசத்தைக் காட்டும் கதையாகவே கருடன் இருக்கும் என டைட்டில் க்ளிம்ப்ஸை பார்த்தாலே தெரிகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள இந்த படம் வரும் மார்ச் 29ம் தேதி இந்த படம் வெளியாக காத்திருக்கிறது. வெற்றிமாறனின் கதை எந்தளவுக்கு வித்தியாசமாக இருக்கிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X