garudan day 1 collection: சூரியின் கருடன் படத்தின் முதல் நாள் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. இப்படத்தில், சொக்கன் என்கிற கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். சூரியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்று பார்க்கலாம்

இதில், சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன்ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Actor Soori Garudan Box office

கருடன் கதை: தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி. அந்த கோவிலின் பட்டா, கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதனை பராமரித்து வருகிறது வடிவுக்கரசியின் குடும்பம். அந்தக் குடும்பத்தை சேர்ந்த சசிகுமார், உன்னி முகுந்தன் இணை பிரியாத நண்பர்களாக உள்ளனர். இதில், சிறுவயது முதல் சோறு போட்டு வளர்ந்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சூரி.

சூரி யார் பக்கம்: சசிகுமார், உன்னி முகுந்தன் இவர்களின் நட்பில் விரிசல் ஏற்படுத்தி, அந்த கோவில் நிலத்தை அடைய திட்டம் போடுகிறார். இவர்களைத் தாண்டிதான் நிலத்தின் பட்டாவை அமைச்சருக்கு கோவிலின் பட்டா கிடைத்ததா.. இல்லையா? இந்த நேரத்தில் சூரி யார் பக்கம் இருந்தார் என்பது தான கருடன் படத்தின் கதை. இந்த படத்தில் சூரி, தன்னை மெறுகேற்றிக்கொண்டு அட்டகாசமாக நடித்து இருக்கிறார் என்றும், நட்பை ஒரு மாறுபட்ட கோணத்தில் அழகாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர். இன்டர்வல் காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் சூப்பராக இருந்தது என்று படம் பார்த்தவர்கள் படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.

முதல் நாள் வசூல்: விடுதலைப்படத்திற்கு பிறகு இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள சூரி, இப்படத்திற்கு சம்பளமாக வாங்கி உள்ள நிலையில், இப்படம் முதல் நாள் 3 கோடியை வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X