Garudan day 3 collection: தரமான சம்பவம் செய்த கருடன்.. 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

சென்னை: நடிகர் சூரி இரண்டாம் முறையாக ஹீரோவாக நடித்துள்ள கருடன் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. சூரிக்கு குவிந்து வரும் பாராட்டால் அவர் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது கருடன் படத்தின் மூன்றாம் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.

இயக்குனர் துரை செந்தில் இயக்கி உள்ள கருடன் படத்தில், நடிகர் சூரி சொக்கன் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Actor Soori Garudan

கருடன்: தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி. அந்த கோவிலின் பட்டா, கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதை பராமரித்து வருகிறது வடிவுக்கரசியின் குடும்பம். அந்தக் குடும்பத்தை சேர்ந்த சசிகுமார், உன்னி முகுந்தன் இணை பிரியாத நண்பர்களாக உள்ளனர். இதில், சிறுவயது முதல் சோறு போட்டு வளர்த்த உன்னி முகுந்தனுக்காக தனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறார் சூரி.

சுவாரசியமான கதை: உன்னி முகுந்தனுக்கு பண கஷ்டம் வர, இவர் ஒரு தவறை செய்துவிடுகிறார். இது குத்து, கொலை வரை சென்று சசிகுமார், உன்னி முகுந்தன் இவர்களின் நட்பில் விரிசலாக மாறிவிடுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, கோவில் நிலத்தை அடைய திட்டம் போடுகிறார் அமைச்சர். அமைச்சருக்கு கோவிலின் பட்டா கிடைத்ததா? நண்பர்கள் சேர்ந்தார்களா? சூரி யார் பக்கம் நின்றார் என்பதுதான்? கருடன் திரைப்படத்தின் மீதிக்கதை.

ஸ்கோர் செய்த சூரி: விடுதலை திரைப்படத்தில் குமரேசன் கேரக்டரில் எப்படி உணர்ச்சி பொங்க நடித்து இருந்தாரோ அதே போல, இந்த படத்திலும், தன்னை மெறுகேற்றிக்கொண்டு நடித்துள்ளார். முதல் பாதியில் வழக்கமான கதையை சென்ற இப்படம் இடைவெளைக்கு பிறகு விறுவிறுப்பு கூட்டி சூரியை மாஸ் ஆக்சன் தியேட்டரையே அலறவிட்டுள்ளார். சசிக்குமார், உன்னி முகந்த், சூரி என படத்தில் மூன்று ஹீரோக்கள் இருந்தாலும், மொத்த கதையையும் தன் தோளில் சுமந்து ஸ்கோர் செய்துள்ளார் சூரி.

மூன்றாம் நாள் வசூல்: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் முதல் நாளில், ரூ. 3.5 கோடிகளை வசூலித்த நிலையில், இரண்டாம் நாளான சனிக்கிழமை ரூ.4.35 கோடியும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று 6.10 கோடியை வசூலித்துள்ளதாகவும் இதுவரை மொத்தம் ரூ.14.45 கோடிகளை இந்தியா முழுவதும் கருடன் திரைப்படம் வசூலித்துள்ளதாகவும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது. திங்கட்கிழமையான இன்று வேலை நாட்களாக இருந்தாலும், பள்ளிகள் விடுமுறை என்பதால், படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X