"டான்" படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார்.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் தயாராகவுள்ள திரைப்படம் டான்.

இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க, அனிருத் இசையமைக்கிறார். Lyca நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தினுடைய நடிகர்கள் தேர்வு தற்போது முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அட்லீயின் அசிஸ்டண்ட்

அட்லீயின் அசிஸ்டண்ட்

டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குனர் அட்லீயிடம் அசிஸ்டண்ட்டாக பணிபுரிந்தவர். டான் திரைப்படம் சிபிக்கு முதல் படமாகும். இதற்குமுன் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனும் அட்லீயின் அசிஸ்டண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய கதாபாத்திரங்கள்

முக்கிய கதாபாத்திரங்கள்

படத்தினுடைய தலைப்பின் அறிவிப்பை தொடர்ந்து முதற்கட்டமாக டான் படத்தில் நடிக்கவுள்ள முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு தேர்வு செய்து அறிவித்தது.
அதில் சமுத்திரக்கனி, S.J. சூரியா, சூரி, பிரியங்கா மோகன் என முக்கிய நடிகர்களை படக்குழு தேர்வு செய்தது.

படத்தில் அறிமுகம்

படத்தில் அறிமுகம்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நேயர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. சிவகார்த்திகேயன் சிவாங்கியின் ஃபேன் என்று சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது சிவாங்கி டான் படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புது முக நடிகர்

புது முக நடிகர்

ஏற்கனவே டான் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி இணைந்துள்ளார். சூரியை தொடர்ந்து பால சரவணன், முனிஷ்காந்த், காளி வெங்கட் என மூன்று நகைச்சுவை நடிகர்கள் இணைந்துள்ளனர். இவர்களுடன் புது முக நடிகராக RJ விஜய் படத்தில் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X