Simbu: சிம்புவை வீழ்த்திய சூரி.. அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்த ப்ளூ சட்டை மாறன்.. என்ன நடந்தது?

சென்னை: சூரி முதன்முறையாக ஹீரோவாக நடித்த விடுதலை படம் கடந்த வாரம் வெளியானது. அந்த படத்துக்கு ஒரு நாள் முன்பாகவே சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம் வெளியானது.

விமர்சன ரீதியாக சூரியின் விடுதலை திரைப்படம் சிம்பு நடித்த பத்து தல படத்தை வீழ்த்தியுள்ளதாக விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் சிம்பு ரசிகர்களை கோபத்தில் கொந்தளிக்க செய்துள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் வசூலிலும் சிம்புவின் பத்து தல படத்தை விடுதலை படம் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

பத்து தல படத்தை பந்தாடிய ப்ளூ சட்டை மாறன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தை பாராட்டி தள்ளி விட்டார். தமிழ் சினிமாவில் இது ஒரு தரமான படம் என்றும் ஹீரோவாக முதல் படத்திலேயே சூரி தன்னை நிரூபித்து விட்டார் என்றும் விடுதலை படத்தின் ரசிகராகவே மாறி ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை கொடுத்ததை பார்த்த ரசிகர்களே ஆச்சர்யப்பட்டு கடந்த வாரம் பத்து தல படத்தை விட்டுட்டு விடுதலையை பார்க்க படையெடுத்தனர்.

ரொம்ப கேவலமாக

ரொம்ப கேவலமாக

மேலும், பத்து தல திரைப்படத்தில் நடித்த சிம்புவை ஒரு கட்டத்தில் டம்மி பீஸ் என்றே ரொம்பவே கேவலமாக கலாய்த்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன். ஏற்கனவே வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் யோகி பாபுவுக்கும் சிம்புவுக்கும் வித்தியாசமே தெரியல என சிம்புவின் மனம் நோகும்படி விமர்சித்து இருந்தார். அதன் பிறகு தான் வெறித்தனமாக வொர்க்கவுட் எல்லாம் செய்து ஸ்லிம்மானார் சிம்பு என்கின்றனர்.

சிம்புவை வீழ்த்திய சூரி

சிம்புவை வீழ்த்திய சூரி

இந்நிலையில், தற்போது வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் பத்து தல படத்தை வீழ்த்தியது என சொல்லாமல் நடிகர் சூரி சிம்புவை வீழ்த்தி விட்டார் என அதிரடியாக மீண்டும் ஒரு வெறுப்பு ட்வீட்டை பதிவிட்டு சிம்பு ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஹாட்ரிக் தோல்வி

ஹாட்ரிக் தோல்வி

மாநாடு படத்திற்கு முன்பு சிம்பு நடிப்பில் வெளியான பல படங்கள் சொதப்பிய நிலையில், மாநாடு படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு மஹா, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என தொடர்ந்து ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளாதாக ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

வசூலிலும் அடி

வசூலிலும் அடி

பத்து தல படத்தை சிம்பு படம் என ஆரம்பத்தில் ப்ரோமோட் செய்து விட்டு ஒரு நாள் முன்பாகவே படத்தை ரிலீஸ் செய்து அதிக வசூலை படக்குழு அள்ளியது. ஆனால், படத்தை பார்த்த ரசிகர்கள் பாதிக்கு மேல் தான் சிம்பு வருகிறார் என்றும் இது கவுதம் கார்த்திக் படம்ப்பா என கலாய்த்த நிலையில், பத்து தல படத்தின் வசூலிலும் மிகப்பெரிய அடி விழுந்தது. அதே நிலையில், விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்ற விடுதலை திரைப்படம் மவுத் டாக் காரணமாக வசூலிலும் சிம்புவின் பத்து தல படத்தை ஓவர்டேக் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

கதை திருட்டு சர்ச்சை

கதை திருட்டு சர்ச்சை

விடுதலை படத்திற்கு எந்தளவுக்கு பாராட்டுக்கள் குவிகிறதோ அதே அளவுக்கு சமூக வலைதளங்களில் இயக்குநர் வெற்றிமாறன் சோளகர் தொட்டி கதையை திருடி இந்த படத்தை இயக்கி உள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும், ஜெயமோகனின் துணைவன் நாவல் தான் இந்த படம் எனக் கூறப்பட்ட நிலையில், அந்த கதைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் வெற்றிமாறன் தரப்பு பரபரப்பு தகவல்களை கூறியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X