Maaveeran - மாவீரன் ரிலீஸ்.. அண்ணன் சூரி சொன்ன வாழ்த்து.. செம பாசமா இருக்காரே

சென்னை: Maaveeran (மாவீரன்) மாவீரன் ரிலீஸுக்கு நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மாவீரன். பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதால் நிச்சயம் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எழுந்திருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது.

Soori Congratulated to Sivakarthikeyan For Maaveeran Movie

எப்படி இருக்கு படம்: அதிகாலை காட்சிகள் எந்தப் படத்துக்கும் இல்லை என்ற சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருப்பதால் காலை 9 மணிக்கு மாவீரன் முதல் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஆவலோடு திரையரங்குக்கு சென்று மாவீரனை பார்த்தார்கள். படத்தை பார்த்த பிறகு முதல் பாதி அட்டகாசமாக இருக்கிறது. இரண்டாம் பாதியும் சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் சிவகார்த்திகேயனின் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிடும் என்கின்றனர் ரசிகர்கள்.

சிவாவின் நடிப்பு எப்படி: மடோன் அஸ்வினின் கதைக்களமும், மேக்கிங்கும் படத்துக்கு எப்படி பலமாக இருக்கிறதோ அதேபோல் சிவகார்த்திகேயனின் நடிப்பும் அருமையாக இருக்கிறது. முக்கியமாக வெகுளித்தனமாக சிவகார்த்திகேயன் தோன்றும் இடங்கள் எல்லாம் ரொம்பவே ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது. இவர் தவிர மிஷ்கினும் தனது நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறிவருகின்றனர்.

Soori Congratulated to Sivakarthikeyan For Maaveeran Movie

படம் பார்த்த சிவா: சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் மாவீரன் படத்தை பார்த்து ரசித்தார். அதேபோல் நடிகை அதிதி ஷங்கரும் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்தார். சிவகார்த்திகேயன் திரையரங்குக்குள் நுழைந்தபோது ஒட்டுமொத்த தியேட்டரும் ரசிகர்களின் கரகோஷத்தாலும், விசில் சத்தத்தாலும் அதிர்ந்தது. ஆகமொத்தம் மாவீரன் படம் சிவாவின் அடுத்த சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் ட்வீட்: படம் ரிலீஸுக்கு முன்னதாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஃபேண்டசி ஆக்‌ஷன் திரைப்படமான மாவீரன் படத்தை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி; எங்களது குழுவின் உழைப்பு நீங்கள் விரும்பும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். படம் பாஸிட்டிவ் விமர்சனத்தை பெற ஆரம்பித்த பிறகு, நீங்கள் சொன்னதுதான் உண்மைதான் சிவா; உங்கள் குழுவின் உழைப்பு எங்களுக்கு பிடித்திருக்கிறது என ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Soori Congratulated to Sivakarthikeyan For Maaveeran Movie

சூரி ட்வீட்: இந்தச் சூழலில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல படங்களில் நடித்தவரும், அவருக்கு நெருக்கமானவர்களில் ஒருவருமான சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் மாவீரன் படம் குறித்து, ""மாவீரன்"திரைப்படம் மாபெரும் வெற்றி பெற அன்புத்தம்பி சிவகார்த்திகேயனுக்கும், அன்புத்தம்பி அருண் விஸ்வாவுக்கும் (மாவீரன் படத்தின் தயாரிப்பாளர்) மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X