twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இறைவன் இருக்கிறான்.. நான் கஷ்டப்பட்டு உழைச்ச காசு கண்டிப்பா வீண் போகாது.. நடிகர் சூரி உருக்கம்!

    |

    சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நடிகர் சூரி மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அம்மன் உணவகம் என்கிற பெயரில் உணவகத்தை நடத்தி வரும் நடிகர் சூரி தற்போது அமைச்சரின் அன்பு கட்டளைக்கு இணங்கி அரசு மருத்துவமனையில் குறைவான விலைக்கு தனது கேண்டினை அங்கே ஆரம்பித்துள்ளார்.

    அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இறைவன் இருக்கிறான். கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு நிச்சயம் வீண் போகாது என உணர்ச்சி வசப்பட்டு பேசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    அஜ்மீர் தர்க்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த இசைப்புயல்.. சூப்பர் போட்டோஸ் வெளியிட்டிருக்காரு! அஜ்மீர் தர்க்காவிற்கு மனைவியுடன் விசிட் செய்த இசைப்புயல்.. சூப்பர் போட்டோஸ் வெளியிட்டிருக்காரு!

    எதிரியான நண்பர்கள்

    எதிரியான நண்பர்கள்

    விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டாவை உண்ணும் போட்டியில் கலந்து கொண்டு சூரி பண்ணிய அலப்பறை தியேட்டர்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டுமின்றி அவருக்கு பரோட்டா சூரி என்கிற பட்டத்தையே பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல படங்களில் இருவரும் இணைந்து நடித்து வந்தனர். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் கதாபாத்திரத்திலும் சூரி கலக்கி இருப்பார். சினிமாவை தாண்டி நண்பர்களாக இருந்த சூரி மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் புகார் ஒன்றின் காரணமாக எதிரிகளாக மாறிவிட்டனர்.

    விஷ்ணு விஷால் தந்தை மீது புகார்

    விஷ்ணு விஷால் தந்தை மீது புகார்

    நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சூரி மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தையிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    எங்க மேல எந்த தப்பும் இல்லை

    எங்க மேல எந்த தப்பும் இல்லை

    கடந்த வாரம் சூரி ஆஜராகி தனது வாக்குமூலத்தை கொடுத்த நிலையில், அதனை தொடர்ந்து ஆஜரான விஷ்ணு விஷால் மற்றும அவரது தந்தை ரமேஷ் குடவாலா, தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் சூரியிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்ட போது தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

    இறைவன் இருக்கிறான்

    இறைவன் இருக்கிறான்

    அதுக்குத்தான் கோர்ட்டும் காவல்துறையும் இருக்கின்றனர். நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு, அவ்வளவு எளிதாக வீணாகி விடாது. இறைவன் இருக்காங்க, இறைவனுக்கு அடுத்ததாக நான் கோர்ட்டை நம்புறேன். நிச்சயம் நல்லது நடக்கும்னு நம்புறேன். போலீசார் இந்த விவகாரத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என நடிகர் சூரி உருக்கமாக பேசி உள்ளார்.

    இந்தியாவே வியக்கும்

    இந்தியாவே வியக்கும்

    சமீபத்தில் வெளியான சில படங்களை பார்த்து எப்படி இந்தியாவே வியந்து பார்த்ததோ அந்த அளவுக்கு விடுதலை படத்தை தரமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன். கூடவே என் மாமா விஜய்சேதுபதியும் இருக்காரு சொல்லவா வேணும், இந்த படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதே எனக்கு ரொம்ப பெருமையாத்தான் இருக்கு.. விடுதலை படம் கடைசி கட்டத்தை நெருங்கி விட்டது விரைவில் படம் ரெடியாகி விடும் என்றும் கூறியுள்ளார் சூரி.

    English summary
    Actor Soori gets emotional and says court and god will give a good judgement in cheating case. He filed a fraudulent case against Vishnu Vishal's father.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X