கஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு புதுபோன் வாங்கிக் கொடுத்த சூரி
சென்னை: கஜா புயலில் தனது செல்போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் சூரி.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகிறார்கள். அவர்களுக்கு திரையுலக பிரபலங்களும், பொது மக்களும் உதவி செய்து வருகிறார்கள்.

நடிகர் ஜி.வி. பிரகாஷ் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார். நடிகர் சூரி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
அப்பொழுது ஒரு பாட்டி சூரியிடம் வந்து புயலில் என் செல்போன் தொலைந்துவிட்டது, அதனால் என் பேரனிடம் பேச முடியவில்லை என்று கூறினார். இதையடுத்து சூரி அந்த பாட்டிக்கு புது செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும் அவருக்கு செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்துள்ளார். சூரியின் இந்த செயலை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications