ஹீரோ சூரியின் அடுத்த அவதாரம் இயக்குநர்.. அதுவும் யாரை பற்றி எடுக்கப்போகிறார் தெரியுமா?

சென்னை: சூரி இப்போது கதையின் நாயகனாக பிஸியாக நடித்துவருகிறார். காமெடி ரோலில் கலக்கிவந்த அவர் ஹீரோவாகவும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு விடுதலை 2 படம் வெளியானது. அந்தப் படத்தில் சூரிக்கான காட்சிகள் முதல் பாகத்தை விடவும் கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் பக்கா மாஸ் சீன்கள் எல்லாம் இருக்கின்றன. சூழல் இப்படி இருக்க சூரியின் அடுத்த அவதாரம் பற்றி தெரியவந்திருக்கிறது.

சினிமாவுக்குள் வந்து ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தவர் சூரி. அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடி சீனில் நடித்து அடையாளப்பட்டார் அவர். அந்தப் படம் கொடுத்த வெளிச்சத்துக்கு பிறகு கோலிவுட் இயக்குநர்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியது. பலரும் தங்களது படங்களில் காமெடி ரோலுக்கு அவரை புக் செய்தார்கள். அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தன்னுடைய திறமையை அருமையாக வெளிப்படுத்தி தனக்கான தனியிடம் ஒன்றை தக்க வைத்துக்கொண்டார்.

soori viduthalai 2

கதையின் நாயகன்: தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்துவந்த அவரை வெற்றிமாறன் கதையின் நாயகனாக மாற்றினார். அந்தவகையில் கடந்த வருடம் வெளியான விடுதலை திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக அறிமுகமானார். காமெடி ரோலில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை எப்படி சரியாக பயன்படுத்தினாரோ அதேபோல் கதையின் நாயகனாக கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்தினார். ஆக்‌ஷன் காட்சிகள், இறுக்கமான காட்சிகள், காதல் காட்சிகள் என விடுதலையில் அவ்வளவு அழகாக ஸ்கோர் செய்திருந்தார் அவர்.

மெகா ஹிட் கருடன்: அந்தப் படத்துக்கு பிறகு பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்திலும் நடித்தார். இவற்றில் கொட்டுக்காளி விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றது. கருடன் படமோ விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக நல்ல முறையில் வசூலும் செய்தது. இதனால் சூரி இனி காமெடி ரோலில் நடிக்கமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. அவரும் அதை தெரிவித்துவிட்டார்.

விடுதலை 2: அவரது நடிப்பில் கடைசியாக விடுதலை 2 படம் வெளியானது. முதல் பாகம் போல் இந்த பாகத்தில் அவருக்கு அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் அவருக்கென்று மாஸ் சீன்களை வைத்திருக்கிறார் வெற்றிமாறன். முக்கியமாக க்ளைமேக்ஸில் சேத்தனை அவர் தாக்கும் காட்சியில் தியேட்டர்களில் விசில் பறந்தது. விடுதலை 2 படத்தை முடித்திருக்கும் அவர் தற்போது மாமன் என்ற படத்தில் நடித்துவருகிறார். அதனை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கிவருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார்.

அடுத்த அவதாரம்: இந்நிலையில் சூரி அடுத்ததாக இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார். அதாவது, தனது தந்தை முத்துச்சாமி, தாய் சேங்கைய அரசி பற்றிய கதை தன்னிடம் இருப்பதாகவும்; விரைவில் அந்தக் கதையை இயக்குவேன்; அது அனைவருக்கும் பிடிக்கும்படியாகத்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதனால் சூரியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதற்கிடையே சூரியிடம் இருக்கும் கதைகளை வைத்து அவ்வளவு படங்கள் செய்யலாம் என்று விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X