'சூரி' என்பது என்னுடைய நிஜப் பெயர் இல்லை! உண்மையான பெயர் என்ன தெரியுமா ?

சென்னை : தமிழில் இப்பொழுது முன்னணி காமெடியனாக உள்ளவர் நடிகர் சூரி.

இதுவரை காமெடியனாக வலம் வந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சூரி தன்னுடைய நிஜ பெயர் இல்லை என்றும் அவரின் உண்மையான பெயரையும் கூறியுள்ளார்.

ரொம்பவே ஃபேமஸ்

ரொம்பவே ஃபேமஸ்

தீபாவளி, பீமா உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலையை காட்டி சினிமாவின் மீதுள்ள காதலால் கோடம்பாக்கத்தில் சுற்றி திரிந்த சூரிக்கு வெண்ணிலா கபடிகுழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சி ரொம்பவே ஃபேமஸ் ஆனது. அதன் பிறகு அனைவரும் இவரை புரோட்டா சூரி எனவே அழைத்து வந்தனர். அதை தொடர்ந்து சூரி நடித்த அனைத்து திரைப்படங்களும் அவரது காமெடிகளும் ரொம்பவே ஃபேமஸ் ஆகி இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் சூரி காம்போ

சிவகார்த்திகேயன் சூரி காம்போ

ஹீரோவுக்கும் காமெடியனுக்கும் கெமிஸ்ட்ரி மிக நன்றாக ஒர்க் அவுட் ஆகி விட்டாலே அந்த படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றுவிடும் அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காம்போவை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது செந்தில் கவுண்டமணி பிறகு சிவகார்த்திகேயன் சூரி காம்போ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களில் காமெடியனாக சூரி ஒப்பந்தம் ஆகி விடுவார் அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவர்களது காம்போ மேலும் பலப் படுத்தியது. இப்பொழுது இருவரும் இணைந்து டான் படத்தில் நடித்துள்ளனர்.

நிஜ பெயர் இல்லை

நிஜ பெயர் இல்லை

வெள்ளந்தியான பேச்சு கள்ளங்கபடமில்லாத காமெடி யாரையும் புண்படுத்தாத குணம் என தனித்துவமான காமெடியின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சூரி சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். அண்ணாத்த படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சூரிய அதில் சூரி என்பது தன்னுடைய நிஜ பெயர் இல்லை என்பதை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Sivakarthikeyan-கு Soori வீட்டில் நடந்த விருந்து | Chicken சாப்பிடுங்க தம்பி
சூரி என மாறிவிட்டது

சூரி என மாறிவிட்டது

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட சூரி ஒரு இரட்டையர் ஆவார். எனவே இவரின் இயற்பெயர் ராம் லக்ஷ்மன் என வைக்கப்பட்டுள்ளது. சிறுவயது முதலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப் பெரிய ரசிகரான இவர் தளபதி படம் ரிலீஸ் ஆகும் போது அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினியின் கதாபாத்திரம் சூர்யா என தன்னுடைய பெயரையும் சூர்யா என சினிமாவிற்காக தனக்குத்தானே மாற்றிக் கொண்டார். பின் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது போற போக்கில் அந்த பெயர் சூர்யா என்பது மாறி சூரி என மாறிவிட்டது. இந்த சுவாரசியமான தகவலை அண்ணாத்த சிறப்பு நிகழ்ச்சியில் சூரி பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X