சூரி நீங்க எங்கேயோ போயிட்டீங்க.. பெர்லினே கை தட்டுதே.. கோட் சூட்டில் சும்மா கெத்துக்காட்டுறாரே!
சென்னை: காமெடி நடிகராக வலம் வந்த சூரி தற்போது சர்வதேச அளவில் சிறந்த படங்களை கொடுத்து சர்வதேச விருது விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அளவுக்கு தமிழ் சினிமாவின் தரத்தையே தனது நடிப்பால் உயர்த்திக் கொண்டிருக்கிறார்.
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த இரண்டு படங்கள் திரையிடப்பட்டு பெரும் பாராட்டுக்களை அள்ளின. இந்நிலையில் அடுத்ததாக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில், தனது கொட்டுக்காளி படத்தை திரையிட்டு அங்கேயும் சர்வதேச ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் சூரி.

கோட் சூட் உடையில் செம கெத்தாக சூரி கொடுத்த போஸ் தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாரையும் சாதாரணமாக எடை போடக்கூடாது: "Don't Judge a book by it's cover என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அந்த பழமொழி தற்போது நடிகர் சூரிக்கு அப்படியே கச்சிதமாக பொருந்துகிறது. அதற்கான உழைப்பையும் சமீபகாலமாக நிறையவே செலுத்தி வருகிறார் சூரி. பரோட்டா காமெடியில் ஆரம்பித்து தற்போது பெர்லின் வரை அவரது புகழ் விண்ணை தொட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில்: நெருப்பு குமார் என மான் கராத்தே படத்தில் கிண்டல் செய்யப்பட்ட அருண் ராஜா காமராஜ் எந்த அளவுக்கு திறமையானவர் என்பதை தனது முதல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் காட்டியிருந்தார். அடுத்து வாழ் படத்தை தயாரித்து பிக் பாஸ் பிரதீப் ஆண்டனியின் பர்ஃபார்மன்ஸை பலரும் அறியும்படி செய்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக சூரியை வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

கோட் சூட்டில் கலக்குறாரே: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகம் நெதர்லாந்தில் உள்ள டாம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு விஜய் சேதுபதி மற்றும் சூரி வெற்றிமாறனுடன் கலந்து கொண்டனர். சுமார் ஐந்து நிமிடங்கள் ஸ்டாண்டிங் ஒவேஷன் அளிக்கப்பட்டது. அந்த திரைப்பட விழாவுக்கு வேட்டி சட்டை அணிந்து சென்ற சூரி, தற்போது பெர்லினில் வேட்டி சட்டை அணிந்தும் கோட் சூட்டில் செம கெத்தாக போஸ் கொடுத்தும் அசத்தியுள்ளார்.

கோடுகளை அழித்து கோட்டை: பரோட்டா மன்னனாக இருந்த சூரி தான் நடித்த காமெடி நடிகர் கோடுகளை அழித்து விருதுகளின் மன்னன், நடிப்பின் நாயகன் என புதிய கோட்டையை கட்டி வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு நன்றி: "உலக அரங்கில் கொட்டுக்காளி!! பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி! நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும் தம்பி சிவகார்த்திகேயனுக்கும் நன்றி!"


Click it and Unblock the Notifications











