ஜெய்பீம் படம் அல்ல பாடம்.. விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை.. சூரி ட்விட்டரில் வாழ்த்து!
சென்னை : ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்து அப்படியே உறைந்து போனேன் என்று நடிகர் சூரி பாராட்டி உள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் அமேசான் ஆன்லைன் தளத்தில் வெளியாகி உள்ளது ஜெய்பீம் திரைப்படம்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜெய் பீம்
பழங்குடியினமான இருளர் இனத்தைச் சேர்ந்த மணிகண்டனை போலீஸார் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்கின்றனர். அவரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சித்திரவதை செய்கின்றனர். இதை எதிர்த்து அவரது மனைவி லிஜோமோல் ஜோஸ் போராடுகிறார். காவல் நிலையத்திலிருந்து மணிகண்டன் தப்பிவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

உண்மை சம்பவம்
போலீசார் மேல் லிஜோமோல் ஜோஸ்க்கு சந்தேகம் வர, வக்கீல் சூர்யாவுடன் இணைந்து போலீசார் மீது வழக்கு தொடர்கிறார். வழக்கு உயர் நீதிமன்றம் வரை செல்கிறது. அங்கு நடக்கும் வழக்கு விசாரணையில் மணிகண்டன் மேல் போடப்பட்ட திருட்டு வழக்கு நிரூபிக்கப்பட்டதா, மணிகண்டன் நிலை என்னவானது? என்பதே படத்தின் கதை.

உறைந்து போனேன்
இத்திரைப்படத்தை பார்த்து பலரும் பாராட்டி வரும் நிலையில், சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் படம. ஜெய்பீம் அல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை. என பதிவிட்டுள்ளார்,

இருளை இகழாதே, அங்கு ஒளியேற்று
அதேபோல தெருக்குரல் அறிவும் ட்விட்டர் பக்கத்தில் இருளை இகழாதே!அங்கு ஒளியேற்று! மறைக்கப்பட்ட வரலாற்றையும், இழைக்கப்படும் அநீதிகளையும், மீட்கப்படவேண்டிய மனித மாண்பையும்,அழுத்தமாகப் பதிந்து, நூற்றாண்டுக் காயங்களில் சமத்துவ மருந்திட்டு ,கால்மேல் கால்போட்டு படிக்கச் சொல்கிறது. ஜெய்பீம் எனும் நம்பிக்கை. நன்றிகள்.என பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











