மம்முட்டியின் தீவிர ரசிகரான சூரி...காரணத்தை போட்டுடைத்த டைரக்டர்
சென்னை : டைரக்டர் கவின் இயக்கும் வேலன் படத்தில் முகின் ராவ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கென்னடி கிளப் படத்தில் நடித்த மீனாட்சி நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சூரி, தம்பி ராமைய்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தந்தை - மகன் பாசத்தை சொல்லும் இந்த படத்தில் பிரபுவின் மகனாக முகின் நடித்துள்ளார். இந்த படத்தில் சூரி, நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார்.

டைரக்டர் கூறிய ரகசியம்
இது பற்றி டைரக்டர் கவின் கூறுகையில், உண்மை தான் மம்முட்டியின் ரசிகர் கேரக்டரில் தான் சூரி நடித்துள்ளார். அவரது கேரக்டரின் பெயர் கூட மம்முகா தினேசன் தான். தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்ட மலையாளியான தம்பி ராமைய்யாவின் மைத்துனனாக சூரி நடித்துள்ளார்.

மம்முட்டிக்காக பெயர் மாற்றம்
தம்பி ராமைய்யாவின் மகளான மீனாட்சியை மலையாளத்தில் பேசி கவர சூரி முயற்சி செய்கிறார். மம்முட்டியின் படங்களை பார்த்து மீனாட்சி அவரின் தீவிர ரசிகையாகி விடுவார். மீனாட்சியை காதலிப்பதற்காக சூரியும் மம்முட்டியின் ரசிகராகி, கோட்டைச்சாமி என்ற தனது பெயரை மம்முகா என மாற்றி வைத்துக் கொள்வார் என்றார்.

ப்ருத்விராஜ் கெட்அப்பில் சூரி
இந்த படம் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் பற்றி கூறிய டைரக்டர், உள்ளூர்காரர்களின் பேச்சுவழக்கை சூரி எளிதில் கற்றுக் கொண்டார். இயல்பாகவே அதை பேசவும் கற்றுக் கொண்டார். அய்யப்பனும் கோஷியும் படத்தில் ப்ருத்விராஜின் தோற்றத்தை போன்று சூரியின் தோற்றம் மாற்றப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பின் சூட்டிங்
படப்பிடிப்புக்கள் முடிந்து போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கொடைக்கானல் மற்றும் சென்னையில் பார் பாடல் ஒன்றும் இன்னும் படமாக்கப்பட உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு பிறகு இந்த பாடல்களின் சூட்டிங் நடத்தப்பட்டு, படத்தின் வேலைகள் முடிக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications