»   »  நடிகர் சூரியின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்

நடிகர் சூரியின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூரியின் தந்தை முத்துசாமி காலமானார்.

நடிகர் சூரியின் தந்தை முத்துசாமி உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை இரவு 10.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. அவர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜாக்கூரில் வசித்து வந்தார்.

Soori's father no more

அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணி அளவில் ராஜாக்கூரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரி சென்னையில் தங்கி படங்களில் நடித்து வருகிறார்.

சூரியின் தந்தை காலமான செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் அவருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

English summary
Actor Soori's father Muthusamy passed away on monday night due to illness.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil