இந்த சூரி எங்கு பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்னு பாருங்களேன்
Recommended Video

சென்னை: மகள் வெண்ணிலா வாங்கிக் கொடுத்த வீட்டில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகர் சூரி.
கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி வந்தவர் சூரி. தற்போது கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ளார். கடைக்குட்டி சிங்கத்தில் சூரியின் நடிப்பு பாராட்டும்படி இருந்தது.
அடுத்ததாக பங்கு சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த சீமராஜா ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
சூரி
சூரி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மகள் வெண்ணிலா வாங்கிக் கொடுத்த பொம்மை வீட்டில் கேக் வெட்டி பிரமாண்டமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது பிள்ளைகளுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த வீடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
வாழ்த்து
சூரி வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் அருமை, பிள்ளைகளுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன்
என் ஆசை அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐 எல்லாரையும் சந்தோஷப்படுத்துற நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கனும்ணே🤗😊❤️ #HappyBirthdaySoori என்று மனதார வாழ்த்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.
ரசிகர்கள்
சிவகார்த்திகேயனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்தும், சி.கா.வுக்கு திருமண நாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
சீமராஜா
எந்தம்பி நீங்க இருக்கிறப்ப என் சந்தோஷத்துக்கு என்ன குறை... சீமராஜாவுக்கு இந்த கணக்குபிள்ளையின் கணக்குவழக்கு இல்லாத நன்றியும் அன்பும்... என்று சிவகார்த்திகேயனுக்கு பதில் அளித்துள்ளார் சூரி.


Click it and Unblock the Notifications











