தோனியின் மிரட்டல் அடி.. எகிறி குதித்த சூரி.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இப்படியொரு ரசிகரா?

சென்னை: சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் தோனி கடைசி ஓவரில் 17 ரன்கள் அடித்து முடித்து வைத்தது பார்த்து நடிகர் சூரி குதித்து கொண்டாடும் காட்சி சமூகவலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அசத்திய தல தோனி... துள்ளி குதித்து கொண்டாடிய நடிகர் சூரி!

நடிகர் சூரி தமிழ் பட காமெடி நடிகர்களில் முக்கியமான ஒருவர். வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் அறிமுகமாகி பரோட்டா சூரி ஆக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். வடிவேலு திரைப்படங்களை விட்டு ஒதுங்கிய காலகட்டத்தில் மதுரை பாஷை பேசி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.

குறுகிய காலத்தில் விஜய், சசிகுமார், சிவகார்த்திகேயன், விமல், விஷால், விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். நடிகர் சூரி பரம கிரிக்கெட் ரசிகர் இவர் தோனியின் தீவிர ரசிகரும் கூட.

சிஎஸ்கே மேட்ச்

சிஎஸ்கே மேட்ச்

நேற்று மும்பை இந்தியன்ஸ்- சிஎஸ்கே அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே அணி பின்னர் நான்கு கேட்சுகளைக் கோட்டைவிட்டு நிறைய ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாரி கொடுத்ததனால் சிஎஸ்கே அணி பேட் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

யாருக்கு வெற்றி

யாருக்கு வெற்றி

பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கே அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் மும்பை அணி வெற்றியை நோக்கி சென்று விட்டது என்று ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை இந்தியன்ஸ் அணியினர் சிறப்பாக பந்துவீசியும், பீல்டிங் செய்தும் தங்கள் பலத்தை நிரூபித்தனர்.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே, இதுவரை ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யவில்லை என்கிற மு.இ.போராட்டம் அதிக ஐபிஎல் கப்பை வைத்துள்ள இரு அணிகளும் மோதியது பெரும் எதிர்பார்ப்பை எப்போதும் ஐபிஎல் போட்டிகளில் ஏற்படுத்தும். இந்த முறையும் அதே போன்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தோனி விளாசல்

தோனி விளாசல்

போட்டியும் விறுவிறுவென சென்றது ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்து சிஎஸ்கே தள்ளாடிக் கொண்டிருந்தது. அப்போது தோனி களம் இறங்கினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் என்ற நிலையில் முதல் பந்திலேயே ஒரு விக்கெட் விழ தோனி பேட்டிங்கை தொடர்ந்தார். 5-பந்துகள் 16 ரன்கள் என்ற நிலையில் ஒரு சிக்சர் ஒரு 2 இரண்டு பவுண்டரிகள் என அடித்த தோனி வழக்கமான பாதையில் துவம்சம் செய்து முடித்து வைத்தார்.

அந்த ஃபினிஷிங் டச்

அந்த ஃபினிஷிங் டச்

கடைசி பந்தில் 4 ரன்கள் என்ற நிலையில் தோனி இப்போதிருக்கும் பார்மில் ஆடுவாரா என்று சந்தேகம் இருந்தது, இதே சந்தேகம் மேட்சை பார்த்த பலரிடமும் காண முடிந்தது. அதனால் கடைசி பந்து எப்படி நேராக வரும் அதை தோனி எங்கே அடிப்பார் என்று கணித்து அங்கு ஆட்களைப் போட்டு வைத்திருந்தார் ரோகித் சர்மா. ஆனால் அவர்களை எல்லாம் மீறி கடைசி பந்தை லாவகமாக பவுண்டரிக்கு தட்டி விட்டு மீண்டும் தான் ஒரு பினிஷர் என்பதை நிருபித்தவர் தோனி.

துள்ளிக் குதித்த சூரி

இதைப்பார்த்த ரசிகர்கள் துள்ளி குதித்தனர், ரசிகர்கள் மட்டுமல்ல இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் சூரி துள்ளிக் குதித்துக் கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவர் வீட்டில் பெரிய திரை டிவி ஸ்கிரீன் முன் ஸ்க்ரீன் அருகில் சென்று படபடப்புடன் நின்று கவனித்து வரும் சூரி தோனி கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்த உடன் குழந்தை போல் துள்ளி குதித்து கொண்டாடுவதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். சமீபத்தில் கேஜிஎஃப் 2 படத்தை வாயை பிளந்து கிரிக்கெட் வீரர்கள் பார்த்ததும் அதேபோல் தோனி கடைசி பந்தில் 4 ரன் அடித்து சிஎஸ்கேவை வெற்றிப்பெற வைத்ததை நடிகர்கள் கொண்டாடி ரசிப்பதும் மாறி மாறி நடந்துதான் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X