சொந்த ஊர் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய சூரி: வைரல் வீடியோ
Recommended Video

சொந்த ஊர் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய சூரி-வீடியோ
மதுரை: நடிகர் சூரி தனது சொந்த ஊர் திருவிழாவில் உறவினர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடியுள்ளார்.
கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் மாப்பிள்ளை சிவகாமியின் செல்வனாக சிறப்பாக நடித்திருந்தார் சூரி. அந்த படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கடைக்குட்டி சிங்கம் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் சூரி தனது சொந்த ஊரான ராஜாக்கூரில் இருக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார்.
திருவிழாவில் தனது உறவினர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடியபோது எடுத்த வீடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். வீடியோவை வெளியிட்டு அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் சொந்த ஊர் ராஜாக்கூரில் காளியம்மன் கோவில் திருவிழாவில் சொந்தபந்தங்களுடன் ஒயிலாட்டம்.
சூரியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி கமெண்ட் போட்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications