Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய்சேதுபதியால் தாமதமாகும் சூரியின் “விடுதலை“ ... கடுப்பான இயக்குநர்!
சென்னை : நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் தாமதத்திற்கு விஜய் சேதுபதிதான் காரணம் என்று கூறப்படுகிறது.
Recommended Video
விஜய், அஜித், சூர்யா, ரஜினி என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்துள்ள சூரி, தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாறுபட்ட கதை களத்தை கொடுத்த வெற்றி மாறன் தற்போது நடிகர் சூரியை நாயனாக வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
சமந்தா
படத்தில்
ஹாலிவுட்
ஸ்டண்ட்
மாஸ்டர்...
வைரலாகும்
புகைப்படம்!

விடுதலை
விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் சூரி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், இயக்குனர் கவுதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.

ஆரம்ப நிலையிலேயே
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட விடுதலை திரைப்படம் தற்போது 60 சதவிகித படப்பிடிப்பை மட்டுமே முடிந்துள்ளது. ஆரம்பத்தில் வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இல்லாதால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து, இயக்குநர் கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் வெற்றிமாறன் அவருக்காக காத்திருந்தார்.

படுபிஸியின் விஜய்சேதுபதி
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் கால்ஷீட் கிடைக்காததால் படம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.பல திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது பேமிலி மேன் வெப் தொடரை இயக்கிய இயக்குநரின் இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனால், விடுதலை படத்திற்கு விஜய்சேதுபதி கால்ஷீட் தரவில்லை என்று கூறப்படுகிறது.

கடுப்பான இயக்குநர்
வெற்றிமாறன் விடுதலை படத்தை முடித்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்த நிலையில் விஜய்சேதுபதி தேதி ஒதுக்காததால் அவர் மீது கோபத்தில் உள்ளார் வெற்றிமாறன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டுகாதல் திரைப்படத்தின் போது, விஜய்சேதுபதி தேதியை ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.