அவரைப் பார்த்த அந்த நொடி.. அஜித் குமார் குறித்து மனம் திறந்த சூரி.. அடடே அட்டகாசமா இருக்கே!
சென்னை: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா ரசிகர்கள் தொடங்கி, பல நடிகர்களுக்கும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறார். அப்படி இருக்கையில் பலரும் அஜித் குமார் குறித்து பல திரைப் பிரபலங்கள் அவ்வப்போது அஜித் குறித்து தெரிவிக்கும் கருத்துக்கள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அப்படியான ஒரு பதிவை தான் நடிகர் சூரி தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித்துடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். தற்போது தனது நீண்ட நாள் கனவான கார் ரேஸிலும் கவனம் செலுத்தி, அதில் பல வெற்றிகளைக் குவித்தும் வருகிறார். அவரது இந்த வெற்றிகள் நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். நாளை வெளியாகவுள்ள காந்தா படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளர்களில் ஒருவரான துல்கர் சல்மான் கூறும்போது, நடிகர் அஜித்குமார் தான் எனக்கு மிகவும் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார். இத்தனை வயதிலும் தனது பல ஆண்டு கால கனவை, நிறைவேற்ற கார் ரேஸ்க்குச் சென்றுள்ளார் என்று பேசியிருந்தார்.

மனம் திறந்த சூரி: இப்படி இருக்கையில் நடிகர் சூரி தனது சமூக வலைதள பக்கத்தில், " அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது - உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது" என்று பதிவிட்டுள்ளார். நடிகர் அஜித்துடன் சூரி இணைந்து நடித்த படம் என்றால் அது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய படமான வேதாளம் படம் தான். அதன் பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.
அஜித் குமார் 64: நடிகர் அஜித்தின் 64வது படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. இதற்கான ப்ரீ புரெடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது பல தயாரிப்பாளர்கள் அஜித் படத்தை தயாரிக்க ஆவலாக இருந்தாலும், அஜித் போடும் சில கண்டிஷன்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துப் போகாததால், தமிழில் உள்ள சில முன்னணி தயாரிப்பாளர்கள் படத்தை தயாரிக்க சுணக்கம் காட்டுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள்: அண்டை மாநிலங்களில் உள்ள தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டாததால், அஜித்தின் குழுவினர் பாலிவுட்டில் இருந்து தயாரிப்பாளரை அழைத்து வர முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.


Click it and Unblock the Notifications











