“இந்த கத்து கத்துறீங்களே டா“.. விழா மேடையில் அடுத்த படத்திற்கு சான்ஸ் கேட்ட சூரி!

சென்னை: எதற்கும் துணிந்தவன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சூரி, மேடையிலேயே அடுத்த படத்திற்கான சான்சை கேட்டார்.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 10-ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உட்பட பலர் நடித்திருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். டி. இமான் இசையமைத்துள்ளார். இன்பா என்ற கதாபாத்திரத்தில் வினய் வில்லனாக நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மாஸ் டிரைலர்

மாஸ் டிரைலர்

இப்படத்தின் டிரைலரை படக்குழு சரியாக 11 மணிக்கு வெளியிட்டது. சுமார் 2.10 நிமிடம் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரில், வாடா தம்பி பாடலின் இசை பின்னணியில் ஒலிக்க சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாக்குறது தான் என சூப்பரான வசனம் வெளியாகி உள்ளது. மேலும் அதிரடி ஆக்சன் காட்சிகளும் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளன.

இந்த கத்து கத்துறீங்களே டா

இந்த கத்து கத்துறீங்களே டா

இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசி நடிகர் சூரி, இந்த படத்தில் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார். இயக்குனர் பாண்டியராஜ், அண்ணன் சூர்யாவின் பெயரை அவர் கூறியதும், ரசிகர்கள் விசில் அடித்த கரகோஷத்தை எழுப்பி கத்தத்தொடங்கிவிட்டனர். சற்று அமைதியான சூரி, தன்னுடைய பாணியில், இந்த கத்து கத்துறீங்களே டா எப்படி பேசுறது என்று கலகலப்புடன் பேசினார்.

புஃல் எனர்ஜி

புஃல் எனர்ஜி

சூரியா அண்ணா, அடுத்த படத்திலும் எனக்கு சான்ஸ் கொடுக்க இந்த விசில் சத்தத்தை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். 2022ம் ஆண்டு வெற்றிகரமாக அமைய புஃல் எனர்ஜி உங்களால் எனக்கு கிடைத்து இருக்கு ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என நடிகர் சூரி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X