இனிமே நானும் ஹீரோ தான்.. சந்தானத்துக்கு செம டஃப் கொடுக்க களமிறங்கிய சூரி.. இயக்குநர் யாரு தெரியுமா?

சென்னை: காமெடி நடிகர்கள் தொடர்ந்து ஹீரோவாக வருவது நாகேஷ், என்.எஸ்.கே காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது.

கவுண்டமணி, வடிவேலு, விவேக் என பல முன்னணி நகைச்சுவை நடிகர்களும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சமீப காலமாக சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அந்த வரிசையில் சூரி புதிதாக இணைந்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நாயகனாக நடித்துள்ள சூரி அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள சூப்பரான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

சந்தானத்துக்கு சறுக்கல்

சந்தானத்துக்கு சறுக்கல்

விஜய் டிவியில் லொள்ளு சபா மூலம் பிரபலமான சந்தானம் சினிமாவில் காமெடி நடிகராக வேறலெவலில் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தார். ஆனால், ஹீரோவாக சந்தானம் பல படங்கள் நடித்து வந்தாலும், பெரிதாக அவருக்கு எந்த படமும் ஒர்க்கவுட் ஆகவில்லை. மீண்டும் காமெடியனாக அஜித்தின் ஏகே 62 படத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்த அவருக்கு, கடைசி நேர ட்விஸ்ட்டாக விக்னேஷ் சிவனையே மாற்றி விட்ட நிலையில், அரண்மனை 4 படத்தில் மட்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அசத்தும் யோகி பாபு

அசத்தும் யோகி பாபு

காமெடி நடிகராக கலக்கி வரும் யோகி பாபு ஹீரோவாகவும் பல தரமான படங்களை கொடுத்து கெத்துக் காட்டி வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் அவர நடித்த மண்டேலா திரைப்படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது தேசிய விருதையே இயக்குநருக்கு பெற்றுத் தந்து, தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான பொம்மை நாயகி படமும் பாராட்டுக்களை பெற்றது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி

சந்தானம், யோகி பாபுவை விட ஒரு படி மேலே சென்று சூரி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்திலேயே ஹீரோவாக விடுதலை படத்தில் அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் வெளியான அந்த ட்ரெய்லர் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சக்கைப் போடு போட்டு வருகிறது. இளையராஜா இசையில் சூரிக்கு காதல் பாடல்கள் மற்றும் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ ஜோடி என முதல் படத்திலேயே மாஸ் காட்டுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சுடும் காட்சிகளில் ஹீரோவாகவே மிரட்டுகிறார் சூரி.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில்

நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் ஆரம்பித்து கனா, வாழ் என கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். கனா படம் ஓடிய அளவுக்கு வாழ் படம் ஓடவில்லை என்றாலும் பலரது பாராட்டுக்களை அந்த படம் பெற்றது. இந்நிலையில், சூரியை ஹீரோவாக வைத்து கொட்டுக்காளி படத்தை தயாரிக்கப் போகும் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

கூழாங்கல் இயக்குநர்

கூழாங்கல் இயக்குநர்

விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவான கூழாங்கல் படத்தை இயக்கி சர்வதேச விருதுகளை குவித்து வரும் தரமான இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் கொட்டுக்காளி படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X