இளையராஜாவின் புது ஸ்டூடியோவில் சூரி படத்தின் பாடல் பதிவு!

சென்னை : இசைஞானி இளையராஜாவின் புது ஸ்டூடியோவில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பாடல் பதிவு தொடங்கியது.

பிரசாத் ஸ்டூடியோ உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அங்கிருந்து வெளியேறிய இளையராஜா இப்பொழுது பிரம்மாண்டமான ஸ்டூடியோ ஒன்றை அமைத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் பாடல் பதிவு இளையராஜாவின் புது ஸ்டூடியோவில் தொடங்கியுள்ளதை நடிகர் சூரி நெகிழ்ந்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

கதாநாயகனாக நடிக்கும்

கதாநாயகனாக நடிக்கும்

அசுரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்குவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் லாக் டவுனில் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு இன்றுவரை தொடங்காமல் இருக்க சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

விஜய்சேதுபதி நடிக்க

விஜய்சேதுபதி நடிக்க

துணைவன் என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற இதில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க இருக்க உடல்நிலை ஒத்து வராததால் அதிலிருந்து விலகிக் கொள்ள அந்த கதாபாத்திரத்தில் இப்பொழுது விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

ரீமேக் செய்யப்பட்டு

ரீமேக் செய்யப்பட்டு

இதுவரை வெளியான வெற்றிமாறன் திரைப்படங்கள் அனைத்தும் விருதுகளையும் சர்வதேச அங்கீகாரங்களையும் பெற்று வர அசுரன் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு விரைவில் திரையில் வெளியாக உள்ளது.

இளையராஜாவிடம் ஆசிர்வாதம்

இளையராஜாவிடம் ஆசிர்வாதம்

இந்த நிலையில் சூரி கதாநாயகனாக நடித்துவரும் படத்தின் பாடல் பதிவு இப்பொழுது இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் தடபுடலாக தொடங்கியிருக்க, நேரில் விஜய் சேதுபதி வெற்றிமாறனுடன் சென்று இளையராஜாவிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு பாடல் பதிவு தொடங்கிய சூரி அதைப்பற்றி நெகிழ்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவுகளை போட்டுள்ளார்

விஜய்சேதுபதி அப்பாவாக

விஜய்சேதுபதி அப்பாவாக

அதில் அவர் கூறியிருப்பதாவது " ஐயா இளையராஜா.. அண்ணன் வெற்றிமாறன் மற்றும் மாமா விஜய் சேதுபதி அவர்களுடன் இன்று எங்கள் படத்தின் பாடல் பதிவு தொடங்கியது.. என் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம்" என பதிவிட்டு இருக்கும் சூரிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். விரைவில் இப்படம் திரையில் வெளியாக உள்ளது. மேலும் இதில் விஜய் சேதுபதி சூரிக்கு அப்பாவாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X