மண்டாடி மரண மாஸா இருக்கும் போலயே.. மேக்கிங் வீடியோவைப் பாருங்க அனல் பறக்குது

சென்னை: நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் 'மண்டாடி' திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படம் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளார் நடிகர் சூரி. குறிப்பாக நடிகர் சுஹாஷின் மிரட்டலான தோற்றமும், அனல் பறக்கும் காட்சிகளும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

அதாவது, 'மண்டாடி' திரைப்படத்தில் சூரியுடன் இணைந்து பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் சுஹாஷ் தொடர்பான சிறப்பு மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படி இருக்கையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்த நடிகர் சூரி, "Every clan has a force that leads the way. Meet Suhas as Saattapuli from the Sammatti Clan in #Mandaadi" என்று பதிவிட்டுள்ளார். அதாவது, "ஒவ்வொரு குலத்திற்கும் வழிநடத்த ஒரு சக்தி இருக்கும். சம்மட்டி குலத்தின் சாட்டைப்புலியாக சுஹாஷை சந்தியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Soori Unveils Mandaadi Making Video Suhas Fierce Saattapuli Avatar Raises Expectations

இந்நிலையில், வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோவில் சுஹாஷ் மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகள், கிராமத்து பின்னணி, கதாபாத்திரத்தின் கெட்டப் மற்றும் படமாக்கப்பட்ட விதம் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால், படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும், "சூரிக்கு இன்னொரு தரமான படம் ரெடி", "மேக்கிங்கே இவ்வளவு மாஸா இருக்கே... படம் எப்படி இருக்குமோ!", "சாட்டைப்புலி கதாபாத்திரம் செம வெயிட்டாக இருக்கும் போல" என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மற்றொருபுறம், 'மண்டாடி' திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Soori Unveils Mandaadi Making Video Suhas Fierce Saattapuli Avatar Raises Expectations

எது எப்படியோ... 'மண்டாடி' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள், "மேக்கிங்கே மரண மாஸாக இருக்கிறது... படம் நிச்சயம் அனல் பறக்கும்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X