Soori - சூரி காட்டில் மழைதான்.. மீண்டும் வெற்றிமாறனுடன் கூட்டணி?

சென்னை: Soori (சூரி) விடுதலை படத்தில் சூரியின் நடிப்புக்கு கிடைத்த மாபெரும் பாராட்டை அடுத்து அவர் மீண்டும் வெற்றிமாறனுடன் இணையவிருக்கிறார் என்ற புதிய தகவல் இப்போது கோலிவுட்டில் பரவிவருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்த அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் சகோதரி பாவனி ஸ்ரீ கதாநாயகியாக நடித்திருந்தார். நக்சல்பாரி இயக்கத்தை சேர்ந்த தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்தது

Soori Will act in director vetrimaarans story

சூரிக்கு குவிந்த பாராட்டு: படத்தின் நாயகனாக சூரி குமரேசன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இதுவரை அவரை காமெடியனாக மட்டும் பார்த்திருந்த ரசிகர்கள் விடுதலையில் அவரது நடிப்பை பார்த்து வாயடைத்து போயினர். ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் எடுத்த ரிஸ்க் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து நிச்சயம் விடுதலை படம் சூரிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தரும் என பலரும் ஆரூடம் கூறிவருகின்றனர்.

விடுதலை 2 எப்போது?: விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானதை அடுத்து அதன் இரண்டாவது பாகம் இன்னும் நான்கு மாதங்களில் வெளியாகும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் விடுதலை முதல் பாகம் சில விமர்சனங்களை பெற்றதை அடுத்து இரண்டாவது பாகத்தை இன்னும் மெருகேற்றுவதற்காக ரிலீஸை வெற்றிமாறன் தள்ளி வைத்திருப்பதாகவும், டிசம்பர் மாதம்தான் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிச்சா இனி ஹீரோதான்: விடுதலை படத்தில் சூரியின் நடிப்பு பெற்ற பாராட்டை அடுத்து சூரிக்கு தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி என்ற படத்தில் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறார் சூரி. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் டைட்டில் க்ளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

Soori Will act in director vetrimaarans story

அமீர் இயக்கத்தில் ஹீரோ?: இந்தப் படத்துக்குப் பிறகு பிரபலமான இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் சூரி ஹீரோவாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் பரபரத்துக்கொண்டிருக்கின்றன. ஸ்க்ரீனில் தலைகாட்டி விட மாட்டோமா என ஏங்கிய சூரி இப்போது வரிசையாக ஹீரோ ரோலில் கமிட்டாகிவருவது அவரை உற்சாகத்தின் உச்சத்தில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கிடைக்கும் வாய்ப்பை வீணடிக்காமல் அடுத்தடுத்து தனது திறமையை நிரூபிக்கும் முனைப்பிலும் அவர் இருக்கிறாராம்.

மீண்டும் வெற்றிமாறனுடன்: இந்நிலையில் வெற்றிமாறனுடன் சூரி மீண்டும் இணையவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது வெற்றிமாறன் எழுதிய கதையை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கப்போகிறாராம். அந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு சூரி இப்போது கமிட்டாகியிருக்கிறாராம். துரை செந்தில்குமார் ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பதும், வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X