இந்திரஜா சங்கர் திருமண விழா.. வெயிட்டான மொய் பணத்தைக் கொடுத்த சூரி.. ரோபா சங்கர் ரியாக்‌ஷனே செம!

சென்னை: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் இன்று மதுரையில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் சூரி கலந்துக் கொண்டார். மணமக்களை வாழ்த்திப் பேசிய சூரி வெயிட்டான மொய் பணத்தையும் ரோபோ சங்கர் கையில் கொடுத்துள்ளார்.

பல கோடி செலவில் தனது மகளின் திருமண விழாவை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார் ரோபோ சங்கர். பிகில், விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்த இந்திரஜா சங்கர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

Soori wishes and gifts heavy amout to Indraja Shankar at her marriage reception

தாய்மாமன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்த இந்திரஜா சங்கர் திருமணத்துக்கு பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருமண ரிசெப்ஷன்: இந்திரஜா சங்கரின் திருமண ரிசெப்ஷன் நேற்று இரவு நடைபெற்றது. பல சினிமா பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். நடிகர் சூரி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். ரோபோ சங்கர், பிரியா தம்பதியினரை 25 ஆண்டுகளாக தெரியும் என்றும் தங்கப்பிள்ளை செல்லப்பிள்ளை இந்திரஜா என்னோட மகள் மாதிரி தான் என சூரி சூப்பராக பேசினார்.

3வது மனுஷனை விடாதீங்க: திருமண வாழ்வில் எந்தவொரு சின்ன பிரச்சனை வந்தாலும் பஞ்சாயத்துக்கு என மூணாவது மனுஷனை மட்டும் உள்ளே விடாதீங்க, நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என திருமணத்துக்கு தேவையான அறிவுரைகளையும் சூரி வழங்கினார்.

வெயிட்டான மொய்: நடிகர் சூரி மேடைக்கு வந்ததுமே கவரில் பணக்கட்டுடன் மொய் வைத்து விட்டார். அதை வாங்கிய ரோபோ சங்கர் ரொம்ப வெயிட்டா இருக்கே என ரியாக்ட் செய்தது அங்கிருந்த பிரபலங்களையும் சொந்தக்காரர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

மனுஷங்களை புடிச்சு வச்சிருக்காரு: சினிமாவில் பல வருடங்களாக பலருடன் நட்பாக பழகி வரும் நல்ல மனுஷன் ரோபோ சங்கர். ஏகப்பட்ட நல்ல மனுஷங்களை அவர் நட்பாக பிடித்து வைத்திருக்கிறார். அதுதான் அவரது தனி சிறப்பு என சூரி ரோபோ சங்கரையும் புகழ்ந்து பாராட்டினார். வெற்றிமாறன் ஹீரோ சூரி என்றும் 2ம் பாகத்துக்காக வெயிட்டிங் என்றும் ரோபோ சங்கர் சூரியை பாராட்டி பேசியுள்ளார். வெள்ளை நிற லெஹங்காவில் இந்திரஜா சங்கர் அழகாக ரிசப்ஷனில் கலக்கினார். மணமக்கள் இருவரும் சூரியின் காலில் விழுந்து ஆசி வாங்கினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X