Garudan Box Office: அயலான், லால் சலாம் எல்லாம் ஓரம்போங்க..4 நாளில் கருடன் வசூல் இத்தனை கோடியா?
சென்னை: காமெடி நடிகராக கோலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த சூரி கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்தார். தனது முதல் படத்திலேயே நடிப்பில் ஸ்கோர் செய்த சூரி துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்த கருடன் படத்தில் நடிப்பு அசுரனாகவே மாறிவிட்டார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் என இதுவரை பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்த துரை செந்தில்குமார் வெற்றிமாறனுடன் பல படங்களில் இணை இயக்குநராக உழைத்துள்ளார். விசுவாசம், பழி, பாவம், துரோகம் நிறைந்த கிராமத்து கதையை பக்காவாக கமர்ஷியல் கலந்து கட்டி கொடுத்து சூரிக்கு ஒரு வெயிட்டான படத்தை கொடுத்திருக்கிறார்.

சூரி, சசி குமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, ஷிவதா, ரோஷினி ஹரிப்ரியன், ரேவதி ஷர்மா, ஆர்.வி. உதயகுமார், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கருடன் திரைப்படம் திங்கட்கிழமையான நேற்றும் வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக கூறுகின்றனர்.
கருடன் 4 நாள் வசூல்: சூரி நடித்து வெளியான கருடன் திரைப்படம் முதல் நாளில் 4.45 கோடி ரூபாயும், 2ம் நாள் 6 கோடி ரூபாயும், 3ம் நாள் 7 கோடி ரூபாயும் வசூல் செய்த நிலையில், திங்கட்கிழமையான நேற்றும் 2.5 கோடி அளவுக்கு வசூல் செய்ததாக கூறுகின்றனர். வழக்கமாக சூரி படங்கள் ஒரு கோடி வசூல் செய்தாலே பெரிய விஷயம் என எதிர்பார்த்த நிலையில், அதிகபட்சமாக 4 நாட்களில் 18 முதல் 20 கோடி வரை வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை அந்த படத்தின் வசூல் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.
லைஃப் டைம் வசூல் எப்படி இருக்கும்?: இந்த வாரம் தமிழில் பெரிய படங்கள் ஏதும் இல்லாத நிலையில், அதிகபட்சமாக சூரி நடித்துள்ள கருடன் படம் 30 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரண்மனை 4 படம் போல 100 கோடி வசூல் அல்ல, 50 கோடி வசூல் செய்வது கூட கடினம் தான் என்கின்றனர். அயலான் மற்றும் லால் சலாம் படங்கள் இந்த ஆண்டு 4 நாட்களில் செய்யாத வசூல் சாதனையை சூரியின் கருடன் படம் செய்திருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











