கவின், சந்தானம் எல்லாம் ஓரம்போங்க.. வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது.. எப்போ ரிலீஸ்?

சென்னை: வெற்றிமாறன் தயாரிப்பில் எதிர்நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசி குமார், உன்னி முகுந்தன், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கருடன் படம் இந்த மாதம் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகி விட்டார். விடுதலை 2ம் பாகம் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு பிறகு பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட படமான கருடன் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது.

Soori s Garudan movie will release this May month

அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

சர்வதேச அங்கீகாரம்: பரோட்டா சூரியாக இருந்த சூரி தற்போது சர்வதேச விருது விழாக்களில் தனது படங்களை திரையிட்டு வெளிநாட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வரும் மகா நடிகராகவே மாறிவிட்டார். காமெடி காட்சிகளில் கூட கடுப்பு வரும்படி காமெடி செய்து வந்த சூரி இதற்கு மேல் இந்த ரூட்டு கட்டுப்படியாகாது என்பதை நினைத்து சரியான நேரத்தில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

கருடன் படம் ரிலீஸ்: இந்த மே மாதம் சுந்தர். சி, யோகி பாபு, தமன்னா, ராஷி கன்னா நடிப்பில் வெளியான அரண்மனை, கவின் நடித்துள்ள ஸ்டார் படங்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த வாரம் சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், மே மாதமே தனது கருடன் படமும் வெளியாகிறது என்கிற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார் சூரி. மே 24ம் தேதி அல்லது மே 31ம் தேதி எந்த தேதியில் வெளியாகும் என்கிற அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். ஏழு கடல் ஏழு மலை, கோட் என வரிசையாக இந்த ஆண்டு யுவன் ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soori s Garudan movie will release this May month

விடுதலை 2வுக்கு வெயிட்டிங்: வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள கருடன் படத்தை பார்க்க ரசிகர்கள் ரெடியாகி வரும் நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை 2 படத்தை பார்க்கவும் ஆவலாக உள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த படம் வெளியாகும் என தெரிகிறது. மேலும், கொட்டுக்காளி படமும் சூரி நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X